Ramdoss plan for seat sharing | 'அவருக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'| Dinamalar

'அவருக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'

Updated : ஜன 04, 2014 | Added : ஜன 04, 2014 | கருத்துகள் (93)
Advertisement
 'அவருக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, பா.ம.க., பலத்த தோல்வியை சந்தித்தது. அதனால், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணி, வெற்றி கூட்டணி' என்ற பேச்சு பொய்யானது.

இந்தத் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத, பா.ம.க., தலைமை, 'இனி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை; அ.தி.மு.க., தி.மு.க.,விடமிருந்து, தமிழகத்தை காப்பாற்றுவதே, எங்களின் குறிக்கோள். தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 2016ல், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என, அறிவித்தது.அதன்பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஜாதி அமைப்பு களை ஒன்றிணைத்து, 'சமூக ஜனநாயக கூட்டணி' என்ற, புது கூட்டணியை ஏற்படுத்தினார். லோக்சபா தேர்தலில் பா.ம.க., போட்டியிட உள்ள ஏழு தொகுதிகளுக்கான, வேட்பாளர் களையும் அறிவித்தார்.இதை கட்சியினர், அதிகம் விரும்பவில்லை. அதனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க, அக்கட்சி இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முடிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம், பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பா.ம.க.,வின் கூட்டணி நிலைப்பாடை, ராமதாஸ் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் கூட்டணி குறித்து எதுவும் பேசாமல், 'ஜாதி கட்சி கூட்டணியில் போட்டியிடுேவாம்' என, அறிவித்தது, கட்சியினர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.உண்மையிலே, பா.ம.க., தனித்து போட்டியிட உள்ளதா என, கட்சி நிர்வாகிகள் சிலரை கேட்டபோது, அதை மறுத்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:பா.ஜ., கூட்டணியில் சேர, ராமதாசும், அன்புமணியும் தயாராக உள்ளனர். அன்புமணியுடன், பா.ஜ., நிர்வாகிகள், தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனாலும், கூட்டணி குறித்த அறிவிப்பை உடனே வெளியிட்டால், கூடுதல், 'சீட்'களை பெற முடியாது.பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், அக்கட்சிக்கு எத்தனை, 'சீட்' ஒதுக்கப்படுகிறதோ, அதே அளவு, தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என, ராமதாஸ் கோரியுள்ளார். எனவே, அதிக, 'சீட்'களை பெறுவதற்காகவே, கூட்டணி குறித்து, பொதுக்குழுவில் அறிவிக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

நமது நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
07-ஜன-201421:03:48 IST Report Abuse
GUNAVENDHAN தேமுதிக வுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு எங்களுக்கும் சீட்டுக்களை ஒதுக்கவேண்டும் என்று பாமகவும் , மதிமுக வும் கேட்பது என்பது அநியாயத்திலும் அநியாயமானது , தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றதோ அதில் பாதியளவு சீட்டுக்களை மேற்படி இரு கட்சிகளுக்கும் ஒதுக்குவது தான் நியாயமான நடவடிக்கையாக படுகின்றது . என்ன ஒரு வித்தியாசம் பாமகவும், மதிமுகவும் எங்களுக்கு இத்தனை கோடிகளை கொடுக்கவேண்டும் என்று கேட்டு அதில் நிர்பந்தப்படுத்த மாட்டார்கள் . தேமுதிக பணம் விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பதால் அவர்களுக்கு பணத்தை அதிகமாக கொடுத்துவிட்டு , மேற்படி இரு கட்சிகளுக்கும் பணத்தை குறைவாக கொடுப்பதால் , அவர்கள் கேட்டபடி சீட்டுக்களை அதிகரித்து தரவும் வாய்ப்புள்ளது . 1967 இல் முதன் முதலாக தமிழகத்தில் அண்ணா மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியை அமைத்து போட்டியிட்டபோது , அந்தந்த கட்சிகளின் செல்வாக்குகளுக்கு ஏற்ப தொகுதிகளை பங்கிட்டுக்கொண்டு தேர்தலை சந்தித்தார்கள், இப்படி இத்தனை கோடிகளை கொடுத்தால் தான் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று எந்த கட்சியும் அப்போதெல்லாம் கேட்டதில்லை . அதன்பிறகு MGR காலத்திலும் பலமுறை மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து போட்டியிட்டுள்ளார், ஆனால் அப்போதெல்லாம் கூட எந்த கட்சியும் இப்படி கோடிக்கணக்கில் பணத்தை கேட்டது கிடையாது, எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்து மற்ற கட்சிகளுடன் கூட்டு அமைத்தபோதுகூட அவர்களுக்கு இத்தனை தொகுதிகள் என்று ஒதுக்கிவிட்டு , தேர்தல் சிலவுக்கு சிலவிடமுடியாத சூழல் இருந்தால் சில லட்சங்களை கொடுப்பார், ஜெயலலிதா முதல்வராக ஆனபிறகும் தேர்தல்களின்போது சிறிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு , தேர்தல் சிலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று ஒரு தொகையை கொடுத்தால், பேசாமல் வாங்கிச்சென்று தேர்தலில் சிலவழிப்பார்கள், அனால் இப்போது தான் விஜயகாந்த் ஒரு புதிய அணுகுமுறையை கூட்டணி பேசும்போதே கடைபிடிக்கின்றார் , இத்தனை கோடிகளை எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதை கூட்டணிக்கான நிபந்தனைகளில் முக்கியமானதாக வைப்பது இப்போது தான் . அரசியல் தலைவர்களின் தரம் எந்த அளவுக்கு தாழ்ந்துபோய்விட்டது என்பதை நினைக்கும்போது மிகவும் அருவருப்பாக உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
r.ravichandran - chennai,இந்தியா
05-ஜன-201412:13:16 IST Report Abuse
r.ravichandran பொது தேர்தலுக்குப்பின் admk மட்டுமே தனி பெரும் கட்சியாக வரும் அப்போதும் ஜெயா கனவு சாத்தியமே
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
04-ஜன-201423:45:43 IST Report Abuse
vandu murugan அவருக்கு 2 அடி கொடுக்க போறோம், நீயும் வாங்கிகிரியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X