தாக்குதலுக்கு தேதி நிர்ணயம்| Dinamalar

தாக்குதலுக்கு தேதி நிர்ணயம்

Added : ஜன 07, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
தாக்குதலுக்கு தேதி நிர்ணயம்

இவர்கள் பின்னர் ஜரார் ஷா என்பவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர் யார் என்று கசாப் மற்றும் அவனது நண்பன் இஸ்மாயில் கேட்டதற்கு, ஜரார் ஷா மற்றும் இப்ராஹிம் இருவரும் இந்த இலக்கத்தின் செய்திப்பிரிவு - மீடியா விங் - தலைவர்கள், ஜரார்ஷா கம்ப்யூட்டர் துறையில் நிபுணன். பாகிஸ்தானில் இருந்து பேசப்படுவதை, ஏதோ வேறு நாட்டிலிருந்து வருவதுபோல் காட்டிக் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைக் கையாளுவதில் - ஏமாற்றுவதில் - நிபுணன். ஜரார் ஷா மற்றும் இப்ராஹிம் இருவரும் இணைந்து அதிநவீன மீடியா ரூம் அமைத்துள்ளார்கள். பல வரைபடங்களை - மேப்ஸ் - இவர்கள் சேகரித்துள்ளனர். பல குறுந்தகடுகள் - சிடி - மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரபல நகரங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் இவர்களிடம் உண்டு. இந்த விவரங்களைக் கொண்டே இவர்கள் தாக்குதல் இலக்குகளைத் தேர்வு செய்கிறார்கள்.
இவர்களில் கசாப் உட்பட 10 பேர் 5 ஜோடிகளாகப் பிரிக்கப்பட்டனர்.


இந்திய படகில்:

மும்பை மீதான தாக்குதலுக்கு 27ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. கராச்சியில் இருந்து மும்பை செல்ல அவர்கள் ஒரு இந்துஸ்தானி படகைக் கைப்பற்ற வேண்டுமென்று அமீர் ஹபீஸ் சையது அவர்களிடம் கூறினான். இந்துஸ்தானத்தில் பணபலம், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம். எனவே இந்த பலம் இருக்குமிடங்களைப் பலவீனப்படுத்திவிட வேண்டுமென்பது குறியாக இருக்க வேண்டுமென்று அமீர் ஹபீஸ் சையது கூறினான்.
இலக்குகள் முடிவு, செயல் திட்டம்: மும்பையில் தாக்க வேண்டிய இடங்களை அமீர் ஹபீஸ் சையது விவரித்தான். 1. விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம், 2) கொலாபாவில் தாஜ் ஹோட்டல், கியோபோல்ட் ஹோட்டல், 3) மலபார் ஹில்ஸ், 4) ஓபிராய் ஹோட்டல் மற்றும் 5) இஸ்ரேலியர்கள் வாழம் நாரிமான் ஹவுஸ் பில்டிங் ஆகிய இடங்களில் ஏ.கே.-47 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியும் கைக்குண்டுகளை எறிந்தும் தாக்க வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இவர்களது குறி, இஸ்லாமியர்களை பிற்படுத்திய அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் இஸ்ரேலியர்களாக இருக்க வேண்டும். விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை ஜனத்திரள் நெருக்கியடிக்கும். எனவே, அந்தத் தாக்குதலில் இந்து, முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாதாகையால், கண்மூடித்தனமாக தாக்க வேண்டும்.


இந்துக்கள் போல் வேடம்:

அமீர் ஹபீஸ் சையது தாக்குதல் நேரத்தை மாலை 7.30 மணி என்று தீர்மானித்துக் கூறினான். காரணம் அந்த நேரத்தில்தான் அங்கு மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே இதில் மாற்றமில்லையென்று ஹபீஸ் கூறினான். இன்னொரு தலைவன் இவர்களுக்கு இந்து பெயர்களுடன் கூடிய போலி அடையாள அட்டைகள் வழங்கப்படுமென்றும் அதைக்கொண்டு இந்தியா செல்லுமாறும் கூறினான். மேலும் இந்துக்கள் போல கையில் மங்கலக் கயிறும் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும், இந்தத் தோற்றத்தில் இவர்களை யாரும் தடுக்க மாட்டார்களென்றும், இந்தப் போலி அடையாள கார்டுகள் மற்றும் இந்து வேஷத்தில் அவர்கள் லட்சியத்தைத் தாராளமாக நடத்திவிடலாமென்று விவரித்தான்.
தங்களது குரூரமான, மிருகத்தனமான குறிக்கோளை நிறைவேற்றத் திட்டமிட்டது எப்படியென்று கசாப் தனது வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறினான்.
விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் கசாப் மற்றும் அவனது கூட்டாளி இருவருமாகப் பிணங்களை மலைபோல் குவிப்பார்கள். அங்கிருந்து மலபார் ஹில்ஸ் போய்ச் சேர்ந்து அங்கு சுட்டுத் தள்ளுவார்கள். ஹபீஸ் ஹர்ஷத், அவன் கூட்டாளி ஜாவேத் இருவரும் தாஜ் ஓட்டலில் தாக்குதல் நடத்துவார்கள். பஹதுல்லா அவனது கூட்டாளி அப்துல் ரகுமான் (சோட்டா) ஓபிராய் ஓட்டலிலும், இம்ரான் பாபர் மற்றும் நசீர் நரிமான் ஹவுஸ் தாக்குதலை நடத்துவார்கள், ஸோஹெப் நசீர் ஜோடி லியோபோல்ட் ஓட்டலைத் தாக்கும். பின்னர் இவர்கள் தாஜ் ஓட்டலில் ஹபீஸ் ஹர்ஷத், ஜாவேத் உடன் சேர்ந்துகொள்வார்கள்.


டாக்சிகளில் வெடிகுண்டு:

விக்டோரியா டெர்மினஸ் செல்லும்போது தங்களது வாடகை டாக்சிகளில் டிரைவர் சீட்டுக்குக் கீழ் ஆர்டீஎக்ஸ் வெடிகுண்டு வைத்துவிடுவார்கள். இதபோல நசீர் அகமது, ஜாவேத் இருவரும் தங்களது வாடகை டாக்சிகளில் குண்டு வைத்துவிடுவார்கள். இந்த டாக்சிகள் இவர்கள் இறங்கிய பின்னர் வேறொரு இடத்தில் வெடித்துச் சிதறும். எந்த வித தடயங்களுமே கிடைக்காது போய்விடும்.
நரிமான் ஹவுஸ், ஓபிராய் மற்றும் தாஜ்மகால் ஓட்டல் ஜோடிகள் பத்திரிகையாளர்களிடம் பொய்யாக நடித்து, பிணைக்கைதிகளாச் சிலரைப் பிடித்துள்ளதாகவும், காஷ்மீர் விடுதலைக்காக இவ்வாறு இவர்கள் செய்ததாகவும் நடிப்பார்கள். தாங்கள் இந்திய முஸ்லிம்கள் என்றும் நடிப்பார்கள். இவ்வாறு நடித்துப் பெரும் பீதியை உருவாக்குவார்கள். இவ்வாறு கசாப் தங்களது செயல் திட்டத்தை மாஜிஸ்திரேட்டிடம் விவரித்தான்.
ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை எவ்வாறு வைக்க வேண்டுமென்று அமீர் ஹபீஸ் மற்றும் அபு ஹம்சா அவர்களுக்குக் கற்றுத்தருவான் என்றும் இந்த 5 ஜோடிகளுக்கும் கூறப்பட்டது.


டி.வி., மூலம் இலக்குகள்:

பின்னர் அமீர் ஹபீஸ் சையத், நாகி-யுர்-ரகிமான் லக்வி, யூசுப் என்னும் முசாமில் அபு உமர் சயீது, காஃபா, அபு ஹம்ஸா மற்றும் ஜரார்ஷா ஆகியோர் இந்தப் பத்துப்பேரையும் ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றனர். இங்கு 2-3 தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன. இந்த அறையே இவர்களதுசெய்திப்பிரிவு - மீடியா விங். மும்பை நகரத்தில் உள்ள பல்வேறு சாலைகள், இவர்களின் இலக்குகள் பெரிய டி.வி. திரையில் இவர்களுக்குக் காட்டப்பட்டது. விடிஎஸ் மற்றும் மலபார் ஹில் விவரங்கள் அடங்கிய சிடி கசாப், இஸ்மாயில் இருவருக்கும் தரப்பட்டது. சாலைகள் பற்றி முழுமையான விவரங்களை ஜரார்ஷா இவர்களுக்கு விளக்கினான்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pambanathaan - Jeddah,சவுதி அரேபியா
07-ஜன-201414:22:58 IST Report Abuse
Pambanathaan "கஷ்மீர் விடுதலைக்காக போராடும் இந்திய முஸ்லிம்களாக நடிப்பார்கள்".... இதனால் இந்திய முஸ்லிம் நண்பர்கள் அல்லவா இங்கு கஷ்டப்படுவார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை. இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதே இவர்களது எண்ணம். இதற்கு இரட்டை வேடம் போடும் மேலை நாடுகளும் உடந்தை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X