குடும்பத்தினருடன் கோபாலபுரத்திற்கு அழகிரி 'விசிட்': கருணாநிதியை சந்தித்தாரா, இல்லையா என்பது கேள்விக்குறி| Dinamalar

குடும்பத்தினருடன் கோபாலபுரத்திற்கு அழகிரி 'விசிட்': கருணாநிதியை சந்தித்தாரா, இல்லையா என்பது கேள்விக்குறி

Added : ஜன 09, 2014 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குடும்பத்தினருடன் கோபாலபுரத்திற்கு அழகிரி 'விசிட்': கருணாநிதியை சந்தித்தாரா, இல்லையா என்பது கேள்விக்குறி

தி.மு.க.,வில், அழகிரி விவகாரத்தில், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மகள் கயல்விழியுடன், கருணாநிதியை சந்திக்க, நேற்று கோபாலபுரம் சென்ற அழகிரி, அரை மணி நேரம் அங்கிருந்தார். ஆனால், அவர் கருணாநிதியை சந்தித்தாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 'அழகிரியை சந்திக்க, கருணாநிதி மறுத்து விட்டார்' என, ஸ்டாலின் ஆதரவு வட்டாரம் கூறுகிறது; அதை மறுக்கும் அழகிரி ஆதரவாளர்கள், 'கட்சித் தலைவரை அழகிரி சந்தித்தது உண்மை; ஆனால், அவர் எதிர்பார்த்தபடியே, கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது' என்கின்றனர்.

ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி தூக்கியுள்ள அழகிரி, தன் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வைப்பதற்காக, கடந்த மூன்று நாட்களாக, சென்னையில் தங்கிஇருந்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, உள்கட்சி விவகாரம் குறித்து பேசவும் முயன்றார். ஆனால், அழகிரி மீதான கோபத்தில், அவரை சந்திக்க, கருணாநிதி மறுத்து வந்தார். அறிவாலயம் வருவதையும் தவிர்த்தார். அங்கு வந்தால், அழகிரி வந்து சந்திக்க நேரிடும் என்பதால், உடல் நலம் பாதிப்பை காரணமாக கூறி, வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், அழகிரியும், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரும். நேற்று காலை, 10:45 மணிக்கு, கோபாலபுரம் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரத்திற்கு பின், பகல், 11:15 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்கள், அழகிரியிடம் கேட்ட எந்த கேள்விக்கும், பதிலளிக்க மறுத்தபடியே, காரில் ஏறிச் சென்று விட்டார். கோபாலபுரம் வந்து சென்ற சிறிது நேரத்தில், 'அழகிரியை சந்திக்க கருணாநிதி மறுத்து விட்டார்; தாயார் தயாளுவை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டார்' என, தகவல் பரவியது. அந்த நேரத்தில், ஸ்டாலின், தன் ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்தார். வழக்கமாக, அந்நேரம் அறிவாலயம் வந்துவிடும் அவர், நேற்று அறிவாலயம் வரவில்லை.

இதுகுறித்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறியதாவது: அழகிரி வரும் தகவல் தெரிந்தே, ஸ்டாலின் அறிவாலயம் போகாமல், வீட்டிலேயே இருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அழகிரி மீதான கோபம், கருணாநிதிக்கு குறையவில்லை. அதனால், கோபாலபுரம் வந்த அழகிரியை சந்திக்க, அவர் மறுத்து விட்டார். அவரது மகன், மகள் மட்டும் சந்தித்துள்ளதாக தெரிகிறது. கருணாநிதியை சந்திக்க முடியாததால், தன் தாயார் தயாளுவை சந்தித்து, 10 நிமிடம் பேசி விட்டு, அழகிரி திரும்பி விட்டார். இவ்வாறு, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இப்படியொரு தகவல் பரப்பப்படுவதை அறிந்ததும், அழகிரி தரப்பினர், கருணாநிதியுடன் நடந்த சந்திப்பை உறுதிப்படுத்த துவங்கினர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: கருணாநிதியிடம் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து தான், அழகிரி அங்கே சென்றார். கோபாலபுரம் சென்றவர், கருணாநிதியை சந்திக்காமல் திரும்புவாரா? அங்கே யாரும் அவருக்கு தடை போட முடியாதே? கருணாநிதியை சந்தித்து, 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அதன்பின், தாயாரிடம், 10 நிமிடம் பேசியுள்ளார். கட்சியில் தற்போது நடக்கும் விவகாரங்கள் குறித்து, தன் விளக்கத்தை, பதிவு செய்து திரும்பி உள்ளார். அதனால் தான், மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறார். ஆனால், 'பத்திரிகைகளுக்கு எந்த பேட்டியும் அளிக்க கூடாது' என, கருணாநிதி கண்டிப்புடன் கூறி விட்டதால், வெளியில் யாரிடமும் பேசாமல் சென்று விட்டார். கருணாநிதியும் இதுபற்றி வெளியில் எதுவும் கூற விரும்பவில்லை. அதனால் தான், சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு செல்வதை தவிர்த்து, கோபாலபுரத்திலேயே, அவர் தங்கி விட்டார். இவ்வாறு, அழகிரி ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
10-ஜன-201413:25:46 IST Report Abuse
rasaa கலைஞரின் குடும்ப ஆலமரம் நன்கு செழித்து நூற்றுகணக்கான விழுதுகளை வேரூன்ற செய்துள்ளது. ஆகவே ஒட்டு மொத்த தி.மு.க. ஆட்சி, அதிகாரம் அவ்வளவும் இந்த விழுதுகளே தாங்கும். தொண்டர்கள் என்றும் நிரந்தர தொண்டர்களாகவே இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
09-ஜன-201418:41:13 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் நேத்துதான் மகன் அப்பாவை பார்த்தார் என்று எழுதினீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Chandrasekar Raghavan - chennai,இந்தியா
09-ஜன-201417:59:04 IST Report Abuse
Chandrasekar Raghavan தென்னைய வைச்சா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X