கருணாநிதியை ஆசாத் சந்தித்தது சரியா?| Dinamalar

கருணாநிதியை ஆசாத் சந்தித்தது சரியா?

Added : ஜன 11, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
கருணாநிதியை ஆசாத் சந்தித்தது சரியா?

சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 'நன்றி கெட்ட காங்கிரசுடன், இனி கூட்டணி கிடையாது' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதை, தி.மு.க., தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 'காங்கிரசுடன் உறவே வேண்டாம்' என, தி.மு.க., இப்படி கதவை சாத்திய நிலையில், அந்தக் கட்சியின் தலைவர், கருணாநிதியை, நேற்று முன்தினம், காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசியதால், தி.மு.க.,விடம், காங்., சரண் அடைந்து விட்டதா என்ற, கேள்வியை எழுப்பியுள்ளது. கருணாநிதி - ஆசாத் சந்திப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும், காங்., பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள் இதோ:

கருணாநிதி மூத்த அரசியல் தலைவர், அவரை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியதில், எந்தத் தவறும் இல்லை. 'கூட்டணியிலிருந்து, நாங்கள் வெளியேறிய பின், காங்கிரஸ் தரப்பில், யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை' என, ஏற்கனவே, கருணாநிதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் எதிரொலியாகவே, சோனியாவின் தூதராக குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளார். காலத்தின் கட்டாயத்தினால், எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திராவை ஒரு காலகட்டத்தில், தி.மு.க., கடுமையாக எதிர்த்தது. மதுரையில் திறந்த ஜீப்பில் வந்த, அவர் தாக்கப்பட்டார். எமர்ஜென்சி காலத்தில், காங்கிரசை, தி.மு.க., கடுமையாக சாடியது. இவை, எல்லா வற்றையும் மறந்து, அதன்பின், 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக' என்ற தாளத்தை மாற்றி, காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி வைத்த வரலாறும் உண்டு. திருமண வீட்டில், மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்ளுக்கு முன், மணமகன், மணமகள் மாறியது உண்டு. எனவே, கருணாநிதி, குலாம்நபி ஆசாத் சந்திப்பிற்கு பின், கூட்டணி புதுப்பிக்கப்படலாம். ஏற்கனவே, வாசன், விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இதுவும் ஒரு நல்ல அறிகுறியே. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கூட்டணி அமைக்கும் சந்தர்ப்பம் உருவாகும். 'காங்கிரசுடன் கூட்டணியே வேண்டாம்' என, கருணாநிதி திட்ட வட்டமாக நினைத்திருந்தால், குலாம்நபி ஆசாத்தை கருணாநிதி சந்தித்திருக்க மாட்டார். 'கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்' என்றும், குலாம்நபி கூறுவது, சம்பிரதாயத்திற்காகவே. இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்தால், அரசியல் பேசாமல் இருக்க முடியாது. எனவே, மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கனியும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரா.அன்பரசு, காங்., மூத்த தலைவர்

கருணாநிதி, குலாம்நபி ஆசாத் சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒருவேளை அரசியல் ரீதியான சந்திப்பாக இருந்தால், நிச்சயமாக அது, காங்., தொண்டர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை அழைக்காமல், குலாம்நபி நேரடியாக, கருணாநிதி இல்லத்திற்கு சென்றது, தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக காங்., தலைவர் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே, கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்திருக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, கிராமங்களில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி, மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால், கைச்சின்னத்தை, 1989க்கு பின், அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் கொண்டு செல்வதற்கு, ஒரு வாய்ப்பாக அமையும். இது காங்கிரசின் எதிர்கால வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும். கடந்த, 47 ஆண்டுகளாக, தமிழகத்தில், திராவிட கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி புரிகின்றன. வரும் காலங்களில், முதன்மை கட்சியாக காங்கிரஸ் வர வேண்டும்; ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய அணி அமைக்க வேண்டும். லோக்சபா தேர்தல், கூட்டணி விஷயத்தில், காங்., தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான, நல்ல முடிவை, கட்சி மேலிடம் எடுக்கும் என, நம்புகிறேன். அதேநேரத்தில், தலைமை எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஆதரிப்போம். கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். ஒருவேளை, தனித்துப் போட்டியிட்டால் கூட, உற்சாகத்தோடு, நாங்கள் பணியாற்றுவோம்.

யுவராஜா, இளைஞர் காங்., முன்னாள் தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201419:28:25 IST Report Abuse
skmoorthi தூண்டில்காரனுக்கு மிதப்பிலே கண் கொள்கை என்ற போலிப் போர்வையில் அலையும் அரசியல் வியாதி்களுக்கு கொள்ளையில் தான் கண் கொள்கை சாயம் ஓட்டுப் போடும் எந்தி்ரங்களை ஏமாற்ற
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X