உள்கட்டமைப்பு வசதி: யார் ஆட்சியின் சாதனை?| Dinamalar

உள்கட்டமைப்பு வசதி: யார் ஆட்சியின் சாதனை?

Added : ஜன 15, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
உள்கட்டமைப்பு வசதி: யார் ஆட்சியின் சாதனை?

நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பவை உள்கட்டமைப்பு வசதிகள். விசாலமான சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற, உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்தால், தொழில் வளம் பெருகுவதோடு, வேலைவாய்ப்பும், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் தான், ஒரு நாட்டில், அன்னிய முதலீடுகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், நம்நாட்டில், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க காரணமாக இருந்தது, பா.ஜ.,வா அல்லது நீண்ட காலம் நாட்டை ஆண்ட காங்கிரசா என்ற விவாதம் எழுந்துள்ளது. அந்த விவாதத்திற்கு, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த இரு கட்சி பிரபலங்கள்:


இந்தியா போன்ற பெரிய நாடுகளில், கூட்டணி ஆட்சியானது, வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் என்பதே, என் கருத்து. இதனால், பல திட்டங்கள் துவங்கப்படுவதில் தாமதம், துவங்கப்பட்ட திட்டங்களை முடிப்பதில் தாமதம் போன்றவை உருவாகின்றன. குறிப்பாக, புதிய ரயில் பாதைகள் அமைப்பது, கூடுதல் பாதைகளை அமைப்பது போன்றவற்றில், திட்டத் தொகையில், மிக சொற்ப தொகையையே ஒதுக்க முடிகிறது. கூட்டணிக் கட்சிகள் பல திட்டங்களை முன் வைக்கின்றன. அவற்றை புறக்கணிக்க முடியாமல், ஏற்றுக் கொள்வதால், முழுத் தொகையையும், ஒதுக்க முடியாமல், சிறு தொகையையே ஒதுக்க வேண்டியதாகிறது. அதனால், திட்டத்தை உரிய காலத்தில் முடிக்க முடியாமல், திட்டச் செலவும் அதிகரிக்கிறது. சாலைப் போக்குவரத்தில், 10 ஆண்டு களில், காங்கிரஸ் அரசு செய்த திட்டங்கள், பெரும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் இல்லாத பகுதியே இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். தேசிய நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளை இணைக்கும் வகையில் அமைத்துள்ளோம். இதனால், கிராம பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது. அதேபோல், தமிழக துறைமுகங்கள் விரிவாக்கப் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய துறைமுகங்கள் பல உருவாக்கப்பட்டு உள்ளன. தங்க நாற்கர சாலைத் திட்டத்தை, வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்னெடுத்தது என்பதில், மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அத்திட்டத்தை விரைவுபடுத்தி, பயனுள்ளதாக செயல்படுத்தியது, காங்கிரஸ் தலைமையிலான அரசே. நான்கு வழிச் சாலைகளாக துவங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், இப்போது, ஆறு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்படுகின்றன. தென்னகத்தில் முதற்கட்டமாக, சென்னை - பெங்களூரு இடையே, ஆறு வழிப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஞானதேசிகன், தலைவர், தமிழக காங்கிரஸ்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல், நாட்டை ஆட்சி செய்த காங்கிசுக்கு, சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனையே இல்லை. வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான், தங்க நாற்கர சாலை, வடக்கு - தெற்கு இணைப்பு சாலை, கிழக்கு - மேற்கு இணைப்பு சாலை என, நாட்டில் நான்கு வழி சாலை திட்டம் நிறைவேற்றியது. இத்திட்டம், வாஜ்பாயின் கனவு திட்டமாக அமைந்தது. நாட்டில், கிராமங்களில் தான், 80 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்காக, மத்திய பட்ஜெட்டில், மிகச் சொற்ப தொகையே ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இந்தத் தொகை, 56 சதவீதமானது. இதன்மூலம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், தொகுப்பு வீடுகள் திட்டம் போன்றவை கிராமப் பகுதிகளுக்குக் கிடைத்தது. தமிழகத்தில், தி.மு.க., அரசின் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மத்திய அரசின் நிதியால், துவக்கப்பட்ட திட்டம். தொலைத்தொடர்பு துறையிலும் பா.ஜ., அரசு புரட்சி செய்தது. கிராமப் பகுதிகளில், கேட்டதும் தொலைபேசி இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்புகள், பா.ஜ., ஆட்சியில் தான் நடைமுறைக்கு வந்தன. மொபைல் போன்களுக்கு வரும், 'இன் கம்மிங்' கால்களுக்கு, நான்கு ரூபாய் கட்டணம் இருந்தது. அதேபோல், 'அவுட் கோயிங்' கால்களுக்கும் இதே கட்டணம் இருந்தது. இதை, நாற்பது பைசாவாகக் குறைத்தது, பா.ஜ., அரசே. பா.ஜ.,வின் ஆறு ஆண்டு கால ஆட்சிக்குப் பின், 10 ஆண்டுகள், காங்கிரஸ் ஆட்சி நடத்தியுள்ளது. அவர்களோ, ரயில்வே உள்ளிட்ட பல, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, நிதியில்லை என, கைவிரித்து சாதனை செய்துள்ளனர்.

திருமலைசாமி, தமிழக பா.ஜ., துணைத் தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தனேஷ் - Coimbatore,இந்தியா
15-ஜன-201422:53:25 IST Report Abuse
தனேஷ் யாராச்சும் வாங்களேன் பா யாராச்சும் காப்பாத்துங்களேன் பா யாராச்சும் லஞ்சத்த ஒழிங்கப் பா... யாராச்சும் சாலைய செரி செய்யுங்க பா... யாராச்சும் மின்சாரம் தாங்க பா யாராச்சும்-னா யாரு? யார் வருவா இது மக்களாட்சி. யாராச்சும் வரமாட்டாங்க. நம்மதான் முன்வரனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X