தடம் பதிப்பதற்குள் இத்தனை சர்ச்சையா?| Dinamalar

தடம் பதிப்பதற்குள் இத்தனை சர்ச்சையா?

Added : ஜன 18, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தடம் பதிப்பதற்குள் இத்தனை சர்ச்சையா?

தமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து, திரிணமுல் காங்., கட்சியிலும், கோஷ்டி கானம் ஒலிக்க துவங்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன், சென்னையில், திரிணமுல் காங்., கட்சி யின் தமிழக தலைவர் என கூறிக்கொண்டு, சுப்ரமணியம் என்பவர் நிருபர்களை சந்தித்தபோது, ''மம்தா பானர்ஜியின் ஒப்புதலுடன், 10 தொகுதி களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டோம். தொகுதிகள் எவை என்பதை விரைவில் அறிவிப்போம். இதற்காக, கோல்கட்டாவிற்கு சென்று, மம்தாவை சந்திக்கவிருக்கிறேன்,'' என்றார். திடீரென நேற்று, அகில இந்திய திரிணமுல் காங்., கட்சியின் தமிழக தலைவர், டாக்டர். ஏ. சபீதா நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''மம்தா பானர்ஜி ஒப்புதலுடன், தேசிய பொதுச் செயலர் முகுல்ராய் பரிந்துரையின் பேரில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், திரிணாமுல் காங்., சார்பில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறேன். மீதமுள்ள 30 தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். தமிழகத்தில் கட்சி தனித்து போட்டியிடும். நாங்கள் தான் உண்மையான திரிணமுல் காங்கிரஸ். சுப்ரமணியம் போலி. அவர் மீது நடவடிக்கை எடுக்க, விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என்றார். இதனால், யார் வெளியிட்டப் பட்டியல் மேலிடத்தின் ஒப்புதலோடு வெளியானது என, புரியாமல் கட்சிக்காரர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர். இந்த தகவல் அறிந்ததும், பதறிப் போன மம்தா பானர்ஜி, தமிழக திரிணமுல் காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக, விரையில் கட்சியின் தேசிய பொதுச் செயலர் முகுல்ராயை சென்னைக்கு அனுப்பி வைக்கப் போவதாக, மத்திய நிர்வாகிகள் தரப்பில் கூறி வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
18-ஜன-201422:54:27 IST Report Abuse
Parthiban S "தடமாவது, பதிப்பதாவது..? இதெல்லாமே இடம் பிடிக்கும் சமாச்சாரம்... இதுல முட்டல், மோதல் இல்லேன்னா எப்படி..?"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X