12 சிலிண்டர் சலுகை வெறும் "பம்மாத்து' அறிவிப்பா?| Dinamalar

12 சிலிண்டர் சலுகை வெறும் "பம்மாத்து' அறிவிப்பா?

Added : ஜன 19, 2014 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
12 சிலிண்டர் சலுகை வெறும் "பம்மாத்து' அறிவிப்பா?

"மானியம் அளிப்பதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது' என கூறி, மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையில் கை வைத்து, ஆண்டுக்கு ஒன்பது என, குறைத்தது மத்திய அரசு. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆண்டுக்கு, 12 சிலிண்டர் என, தற்போது உயர்த்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டுகாக காங்கிரஸ் இப்படி செய்கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளின் கருத்துக்கள் இதோ:

மானிய விலையில் விற்கப்படும் காஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை, மத்திய அரசு குறைத்தபோதே, பொதுமக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ஒன்பது சிலிண்டர்கள் போதாது; 12ஆக உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். கடும் விலைவாசி உயர்வில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, மானிய சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைத்ததும், பெரும் இடியாக இருந்தது. "மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரித்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்' என, சாக்கு,போக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்மையில் நடந்த, ஐந்து மாநில தேர்தல்களில், பெருத்த அடி வாங்கிய காங்கிரஸ் அரசு, லோக்சபா தேர்தலிலும், மக்களின் இந்த வெறுப்பு எதிரொலிக்கும் என பயந்து, எதாவது செய்து, மக்களிடம் நல்ல பெயர் எடுக்க, குறுக்கு வழியில் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.
இதனால், காங்கிரசின் அகில இந்திய கூட்டத்தில், "மானிய சிலிண்டர் எண்ணிக்கையை, 12 ஆக உயர்த்த வேண்டும்' என, ராகுல் கூறிய, ஐந்து நிமிடங்களில், மானிய சிலிண்டரின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்தி, மத்திய அரசு அறிவிக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்காத காங்கிரஸ், ஏதோ ராகுல் மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கிறார் என்பது போல், காட்டிக் கொள்ள முனைகிறது. அதற்கான நடவடிக்கையாகத் தான், மானிய சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்திஉள்ளது. காங்கிரசின் இந்த வித்தைகளை எல்லாம், மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். கடந்த, 10 ஆண்டு ஆட்சியில், மக்கள் அனுபவித்த ரணங்கள், காங்கிரசுக்கு தக்க பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். தேர்தல் நேர பம்மாத்து வேலைகளால், மக்களின் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என, காங்கிரஸ் நினைத்தால் அது நிராசையாகவே முடியும்.

வானதி சீனிவாசன், மாநில செயலர், தமிழக பா.ஜ.,

அரசின் மானியம், உரியவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம். வசதி படைத்தவர்களுக்கும் மானியம் சென்றடைவதால், அதில் பயனுமில்லை; அரசுக்கும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்கத் தான், "உங்கள் கையில் உங்கள் பணம்' மற்றும், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால், மானிய விலையில் அளிக்கும் சிலிண்டரின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, ஒன்பதாக அரசு குறைத்தது.
நடுத்தர குடும்பத்தில், தாய், தந்தை, இரு குழந்தைகள் மற்றும் தாத்தா, பாட்டி என, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஆறு பேருக்கு மேல் உள்ளது. எனவே, மானிய விலையில் அளிக்கும் சிலிண்டரின் எண்ணிக்கையை, மாதத்துக்கு ஒன்று என, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்ஆக அதிகரிக்க வேண்டும் என,
மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை, பல மாதங்களாக, பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையில் இருந்து வந்தது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய, ராகுலும், "ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை, மானிய விலையில் அளிக்க வேண்டும்' என, மத்திய தர மக்களின் கருத்தை எதிரொலித்தார். எந்த நேரத்திலும், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை, 12 ஆக உயர்த்தப்படும் என்ற நிலையில், நேற்று அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப் பட்டது. ராகுல் சொன்னதும் வெளியிடப்பட்டது என்ற கூறுவதில் நியாயம் இல்லை. எதிர்க்கட்சிகள் தங்களின் வழக்கமான எதிர்ப்பை, இந்த அறிவிப்பிலும் தெரிவித்துள்ளன என்பதைத் தவிர, வேறு எதுவும் இதில் இல்லை.

பீட்டர் அல்போன்ஸ் , நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழக காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
19-ஜன-201420:01:27 IST Report Abuse
PR Makudeswaran திரு பீட்டர் உங்கள் ராகுல் வேறு ஒரு நேரத்தில் வேறு சந்தர்ப்பங்களில் இதைச் சொல்லியிருந்தால் அந்த நடைமுறை சரியாகப் படும்.இது அப்படி இல்லை காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கிறதே. உங்களின் சமாதானம் சொல்லும் இந்தப் பாணி நீங்கள் வழக்கமாக சப்பைக் கட்டு கட்டும் பாணி தானே
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-ஜன-201416:05:12 IST Report Abuse
N.Kaliraj ஆதார் அட்டை இன்னமும் பலருக்கு கிடைக்கவில்லை....ஆகவே மானிய சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயமாக்கக் கூடாது.......
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-ஜன-201415:56:34 IST Report Abuse
N.Kaliraj சரிங்க.....ஆதார் அட்டையே இன்னமும் பலருக்கு கிடைக்கவில்லை....ஆதார் அட்டை தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தால், ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் மீண்டும் அருகில் ஏதாவதொரு முகாமில் புகைப்படம் எடுத்து பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவுருத்துகிறார்களே....இது இப்படி இருக்கையில் நாங்கள் எப்படிசிலிண்டர் மீதான மானியம் பெறுவது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X