சாப்பாடு டப்பாக்களில் வெடிகுண்டுகள்| Dinamalar

சாப்பாடு டப்பாக்களில் வெடிகுண்டுகள்

Added : ஜன 21, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சாப்பாடு டப்பாக்களில் வெடிகுண்டுகள்

கசாப் வாக்குமூலம் தொடர்கிறது: மும்பை நாசவேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 முஜாஹிதீன்களையும், அமீர் ஹபீஸ் சையத், ஸாகியுர் ரகுமான் லக்வி, யூசூப் என்ற முசாமில், அபு-அல்-காமா, அபு உமர் சையத், காஃபா, அபு ஹம்சா மற்றும் ஜரார்ஷா ஒரு பெரிய அறைக்கு அழைத்து வந்தனர். அங்கே 2-3 டி.வி.க்கள் இருந்தன. இதுதான் இயக்கத்தின் மீடியா பிரிவின் கட்டுப்பாட்டு அறை.


டி.வி.,யில் வரைபடங்கள்:

ஒரு பெரிய டிவி திரையில் மும்பையில் இலக்குகளை அடையும் சாலைகள் இவர்களுக்கு விளக்கிக் காட்டப்பட்டன. விக்டோரியா டெர்மினஸ் மற்றும் மலபார் ஹில்ஸ் பகுதிகளைப் பற்றிய சித்திரமும் ஒரு சிடி மூலம் காட்டப்பட்டது. இவற்றையடையும் வழிகளும் காட்டப்பட்டன. கூகுள் எர்த் முறை மூலம் பந்த்வார் பார்க் என்ற இடத்திலிருந்து விடிஎஸ் மற்றும் இங்கிருந்து மலபார் ஹில்ஸ் செல்லும் வழிகள் தெளிவாகக் காட்டப்பட்டன. கையினால் வரையப்பட்ட வரைபடம் ஒன்றும் விளக்கப்பட்டது. இந்தப் படங்கள் இந்தியாவில் வசிக்கும் பகீம் அன்சாரி மற்றும் சபாவுதீன் (குற்றவாளிகள் 2, 3) ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதைக்கொண்டு இலக்குகளைச் சுலபமாக அடையலாம். இவர்கள் வசிக்கும் இடங்களும் இவர்களுக்கும் கூறப்பட்டது. இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்ற கேள்விக்கு, இந்தியாவில் உள்ள ராம்பூர் போலீஸ் முகாம் தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக, காஃபா பதிலளித்தான். மேலும் இந்த வரைபடங்களையொட்டி, பந்த்வார் பார்க்கில் இருந்து விடிஎஸ் மற்றும் மலபார் ஹில்ஸ் இலக்குகளையடைய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுமென்பதையும் காஃபா விளக்கினான். மேலும் விடிஎஸ் செல்லும் வழியில் கூபரேஜ் திடல் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளதாகவும் இதை டாக்சி டிரைவரிடம் கூறுமாறும் காஃபா கூறினான். இதே போன்று மற்ற ஜோடிகளுக்கும் அவரவர் இலக்குகள், வழி விவரம் ஆகியவை சிடி மற்றும் கூகுள் எர்த் சிஸ்டம் மூலம் விளக்கப்பட்டன. இவைகளும் சபாவுதீன், பகீம் தோழர்களால் அனுப்பப்பட்டவையே.


ஏகே 47 துப்பாக்கியில் பயிற்சி:

ரோஸா 15வது நாள் இவர்களை அபுஹசோ, காபா இருவரும் இந்த 10 முஜாஹிதீன்களையும் முசாபராபாத் மலைக்கு அழைத்துச் சென்றனர். ஏகே 47 துப்பாக்கிகளைக் கையாள்வது, எந்தெந்த இடத்தில் எந்தக் கோணத்தில் நிற்க வேண்டுமென்ற பயிற்சிகளை இவர்கள் மேற்கொண்டனர். ஆர்டீஎக்ஸ் பயன்படுத்தி சாப்பாடு டப்பாக்களில் வைத்து, அவற்றில் டைமர் பொருத்திவைப்பது எப்படி என்றும் இவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. அதையொட்டிய சகல பாடங்களும் நடந்தன. இவர்களில் இம்ரான் பாபர் என்பவனுக்குப் பிரத்யேகமாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்பட்டது. அன்று இரவே இவர்கள் பைதுல் முஜாஹிதீன் என்ற இடத்துக்குத் திரும்பினர்.


பேட்டரி பொருத்தி்ய டைமர்கள்:

ரோஸா 16வது நாள், முடிதிருத்தி சவரம் செய்துகொள்ளுமாறு காஃபா இவர்களுக்கு உத்தரவிட்டான். இவர்களுக்குப் புதிய ஆடைகள், ஷûஸ், சாக்ஸ் தரப்பட்டன. அவைகளில் உள்ள லேபல்கள் அகற்றப்பட்டன. இவர்களுக்குக் கை கடிகாரங்கள் - இந்திய நேரத்துக்குச் சரியாக மாற்றப்பட்டுத் தரப்பட்டன. இவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
ரோஸா 17வது நாள் காஃபா இவர்களை ரயில் மூலம் கராச்சிக்கு அழைத்துச் சென்று அனீஸாபாத் மொகல்லா என்ற வீட்டில் தங்கவைத்தான். அந்த வீட்டில் தைபாத்தா என்ற உருதுமொழிப் பத்திரிகை காணப்பட்டது. 6 முஜாஹிதீன்களைப் பற்றிய பெயர் மற்றும் குறிப்புகள் இருந்தன. காஷ்மீர் லட்சியத்தில் போராடி, இந்துஸ்தான் ராணுவத்துடன் நடந்த போரில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த லட்சிய வீரர்கள் என்றும், அல்லா அவர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டாரென்றும் கசாப் இடம் காஃபா கூறினான்.
ரோஸா 18வது நாள் காஃபா 10 டைமர்கள் கொண்டுவந்து, அவற்றில் பேட்டரிகளைப் பொருத்தி, நேரத்தைக் குறிப்பது பற்றிக் கற்பித்தான். காஃபா சொற்படி இவர்கள் தங்கள் பெயர்களை இந்த டைமர்களில் பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து டைமர்களை காஃபா எடுத்துக்கொண்டான்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Chennai,இந்தியா
28-ஜன-201421:54:42 IST Report Abuse
Anbu ஏன்டா மக்கள் சாப்படற டிபன் பாக்ஸ் லயே வெடி குண்டு நிறைக்கறீங்க, நல்ல புத்திட உங்களுக்கு.... நிச்சயம் பாகிஸ்தான் காரன் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம பஞ்சத்துல தான் செத்து அழிவான் .... நாங்களும் பாக்க தானே போறோம்.... தர்மம் வென்று தான் தீரும்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
22-ஜன-201407:00:17 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இவ்வளவு தெளிவா எடுத்து கூறினாலும் இந்தியாவில் சில ஜடங்கள் இன்னமும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றது பார்த்தா?
Rate this:
Share this comment
Cancel
VSRINIVASAN - PUDHUCHERRY,இந்தியா
21-ஜன-201419:31:46 IST Report Abuse
VSRINIVASAN தீவிர வாதத்திற்கு வறுமையும் கல்வியறிவும் இல்லாததும் தான் முக்கிய காரணம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X