எம்.பி., பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,வில் குடுமிப்பிடி : "சீட்'டுக்கு தவமாய் தவமிருக்கும் தா.பாண்டியன் | Dinamalar

எம்.பி., பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,வில் குடுமிப்பிடி : "சீட்'டுக்கு தவமாய் தவமிருக்கும் தா.பாண்டியன்

Added : ஜன 23, 2014
Advertisement
எம்.பி., பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,வில் குடுமிப்பிடி  : "சீட்'டுக்கு தவமாய் தவமிருக்கும் தா.பாண்டியன்

தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், நான்கு பேர், கூட்டணி கட்சிகளான, கம்யூ., ஆதர வில் ஒருவர் என, ஐந்து பேர், அ.தி.மு.க., அணியில் தேர்வாவது உறுதி. கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில், ஒரு எம்.பி., பதவிக்கு, இந்திய கம்யூ.,வைச் சேர்ந்த, ராஜா தேர்வு செய்யப்பட்டதால், இந்த முறை, ஒரு எம்.பி., பதவி, "சீட்'டை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள், சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது கொடநாடு இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதனால், ஐந்தாவது எம்.பி., சீட், மார்க்சிஸ்ட்களுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், இந்திய கம்யூ., மாநில செயலர், தா.பாண்டியனும், தனக்கு, ராஜ்யசபா எம்.பி., சீட் தர வேண்டும் என, எதிர்பார்க்கிறார். அதற்கு பதிலாக, லோக்சபா தேர்தலில், இந்திய கம்யூ., கட்சிக்கு, இரு தொகுதிகளை ஒதுக்காமல், ஒரு தொகுதியை ஒதுக்கினால் போதும்.சமீபத்தில், சென்னையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரின் இல்லத்திற்கு சென்ற, இந்திய கம்யூ., மூத்த தலைவர்கள் சிலர், அவரிடம் கூறியதாவது: தா.பாண்டியனுக்கு, 80 வயதாகி விட்டது. இனிமேல் அவர், லோக்சபா தேர்தலில் நின்று, மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்பது மற்றும் பிரசாரம் செய்வது எல்லாம் சிரமம். எனவே, அவரது வயது மற்றும் அரசியலில் அவருக்கு உள்ள நீண்ட அனுபவம் அடிப்படையில், அ.தி.மு.க.,விற்கான, நான்கு எம்.பி., பதவி இடங்களில், ஒரு இடத்தை, பாண்டியனுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சரிடம், கம்யூ., தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் சொன்னதை கேட்ட, அந்த அமைச்சர், "முதல்வர் ஜெயலலிதாவிடம், உங்கள் பிரச்னையை கூறுங்கள்' என, யோசனை தெரிவித்து உள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, இந்திய கம்யூ., மூத்த தலைவர்கள் சிலர், தவமாய் தவமிருந்து வருகின்றனர். இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூ.,க்காக, ஒதுக்கப்பட உள்ள, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அந்தக் கட்சியின் மாநில செயலர், ஜி.ராமகிருஷ்ணன் போட்டியிட வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே, பதவி வகித்து விட்டதால், இம்முறை, ராமகிருஷ்ணனுக்கு தர வேண்டும் என்பதே, அவர்களின் கோரிக்கை. அதேநேரத்தில், தற்போதைய, எம்.பி.,யான, டி.கே.ரங்கராஜனுக்கே, மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என, அவரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதனால், யாருக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது என்பதை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு முடிவு செய்யும் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X