Food security act implement in 7 states partially | உணவு பாதுகாப்பு சட்டம்: 7 மாநிலங்களில் ஓரளவு அமல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உணவு பாதுகாப்பு சட்டம்: 7 மாநிலங்களில் ஓரளவு அமல்

Updated : ஜன 23, 2014 | Added : ஜன 23, 2014 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உணவு பாதுகாப்பு சட்டம்: 7 மாநிலங்களில் ஓரளவு அமல்

புதுடில்லி : ஐ.மு., கூட்டணி அரசின் லட்சிய திட்டமான உணவு பாதுகாப்பு சட்டம், அமலுக்கு வந்த சில மாதங்களில், ஏழு மாநிலங்களில் ஒரளவு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது; மேலும், மூன்று மாநிலங்களில்,அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் : இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில், மூன்றில் இரண்டு மக்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானிய பொருட்கள் கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு, செப்டம்பர் மாதம், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன், அமல்படுத்த மத்திய அரசு, தீவிரம் காட்டி வருகிறது. இன்றைய நிலையில், ஏழு மாநிலங்களில் மட்டும், ஓரளவே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் : டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்ளில் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், ஒன்றிரண்டு தவிர, மற்ற மாநிலங்களில், ஓரளவு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், இந்த திட்டத்தால் பயன் அடைய கூடியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. உ.பி., தமிழகம், ஆந்திரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், இதற்கான பணிகள் இன்னும் துவங்கவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், இத்திட்டத்தை, லோக்சபா தேர்தலுக்கு முன் அமல்படுத்திட தீவிரம் காட்டப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
23-ஜன-201409:40:58 IST Report Abuse
Ravikrishna தேர்தல் வரும் போது மட்டும் அவசரமாய் இலவசங்களை அமுல்படுத்தி வோட்டு வாங்கிடுங்க குறைந்தவிலை, மானியம் ,அமுல்படுத்தி எங்களை இன்னும் பிச்சைக்காரர் ஆக்குங்கள். நாடு உருப்பிட வேண்டுமானால் இவை அனைத்தும் தேவை இல்லை .
Rate this:
Share this comment
Cancel
எவர்கிங் ஏகாம்பரம் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
23-ஜன-201409:02:41 IST Report Abuse
எவர்கிங் ஏகாம்பரம்  ஓரளவு என்றால், அரை வயிற்றுக்கா? அல்லது ஆறு அங்குல உயரத்திற்க்கா?
Rate this:
Share this comment
Cancel
Sundar Rajan - chennai,மாலத்தீவு
23-ஜன-201408:14:13 IST Report Abuse
Sundar Rajan உணவு தானிய பொருட்கள் மற்றும் காய் கனிகள் பாதுகாப்பும் மிக மிக மிக அவசியம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X