'மும்மூர்த்தி'களால் பொருளாதாரம் மேம்பட்டதா?| Dinamalar

'மும்மூர்த்தி'களால் பொருளாதாரம் மேம்பட்டதா?

Added : ஜன 26, 2014 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'மும்மூர்த்தி'களால் பொருளாதாரம் மேம்பட்டதா?

நாட்டில், தனி மனித வருமானம் எந்த விதத்திலும் உயரவில்லை. ஆனால், விலைவாசி மட்டும், பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் நிறைய சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை தகர்க்க, மத்திய அரசு, பொருளாதார ரீதியாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கு, காங்கிரஸ் ஆட்சியில் மும்மூர்த்திகளாக போற்றப்படும், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ஆகியோரே, காரணம் என்கின்றனர் காங்கிரசார். அவர்களின் கூற்று சரியா, தவறா என்பது குறித்து இரு அரசியல்வாதிகள் நடத்திய கருத்து மோதல் இங்கே:


'நாட்டின் பொருளாதார மேதைகள்' என, சொல்லிக் கொள்ளும் இந்த மூவரால் தான், நாட்டில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. நாட்டின், நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரிசெய்ய, தங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்தால் போதும் என்ற நிலையை அவர்கள் எடுத்தனர். ஆனால், அதில் நகைப்புக்குரிய செயலை செய்துள்ளனர். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்திருந்த போது, இறக்குமதிக்கு தடை விதித்தனர். தங்கத்தின் விலை அதிகரித்துள்ள போது, இறக்குமதியை அனுமதித்துள்ளனர். இதிலிருந்தே, இவர்களின் பொருளாதார கணக்குகளை புரிந்து கொள்ளலாம். நாட்டில், அத்தியாவசிய பொருட்கள், தேவையற்ற பொருட்கள் என, பெரும் பட்டியல் உள்ளது. உணவு, மருந்து போன்றவை, என்ன விலை விற்றாலும், உள்நாட்டின் தேவைக்கு ஏற்ப அவற்றை இறக்குமதி செய்தே ஆக வேண்டும். ஆனால், பொம்மைகள், அழகு சாதன பொருட்கள், மது வகைகள் போன்றவற்றை, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை. மேலும், உள்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர, தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், நம் நாட்டிலிருந்து சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதி, மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகத்தை கணக்கிட்டாலே, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கான காரணத்தை அறிந்து, அதை நிவர்த்தி செய்யலாம். சந்தை பொருளாதாரத்தை அமல்படுத்தி, நீண்ட தூரம் வந்துவிட்டோம். இனி, திரும்ப முடியாது என, கூறுவதை ஏற்க முடியாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், சில அம்சங்கள் உள்ளன. அவற்றை, கையாள இவர்களுக்கு தெரியவில்லை. அதனால், பொறுத்திருங்கள், காத்திருங்கள், பொருளாதாரம் மேம்படும் என, மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

புதிய பொருளாதார கொள்கையை, 1991ல், நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அமல்படுத்தினார். அந்த நேரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, 2,000 கோடி ரூபாய். புதிய பொருளாதார கொள்கை அமலான, 23 ஆண்டுகளுக்குப் பின், இப்போதைய கையிருப்பு, 16 லட்சம் கோடி ரூபாய். இந்த சாதனைகளை செய்தவர்கள், இந்த மும்மூர்த்திகளே. முன் எப்போதும் இல்லாத அளவில், ஐ.மு., கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டுகளில், நாட்டின் வளர்ச்சி, 8.5 சதவீதம். புதிய பொருளாதார கொள்கை அமல்செய்த பின், உலகம் சுருங்கிவிட்டது. பிரேசிலின் பொருளாதார நெருக்கடி, கோவை, திருப்பூர் தொழிலை பாதிக்கிறது. உலக நாடுகள் எல்லாம், பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட போது, அதன் பாதிப்பு இந்தியாவிலும் நிலவியது. ஆனாலும், அதிலிருந்து இந்தியாவை மீட்டவர்கள், இந்த மும்மூர்த்திகளே. உலக பொருளாதார பின்னடைவுக்குப் பிறகும், நாட்டின் வளர்ச்சியை, 5 சதவீதத்தில் நிலை நிறுத்தியுள்ளனர். உலக நாடுகளில், 5 சதவீத வளர்ச்சிக்கு மேல் உள்ள நாடுகள் இரண்டு தான், ஒன்று, சீனா, மற்றொன்று இந்தியா தான். இவ்வளவு நெருக்கடியிலும், சமூக திட்டங்களான, 100 நாள் வேலை திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம், தேசிய சுகாதார திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகிய வற்றையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினர், மத்திய அரசின் மீது, குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாடு வளர்ச்சி கண்டபோது, அதற்கு காரணமானவர்களை போற்ற மனமில்லை. வளர்ச்சியில் சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ள போது, அதற்கு பிரதமர், நிதி அமைச்சர், திட்டக்குழு துணைத் தலைவர் ஆகியோரை தாறுமாறாக வசைபாடுவது அரசியல் நாகரீகம் அல்ல.

கோபண்ணா, மூத்த தலைவர், தமிழக காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜன-201422:29:32 IST Report Abuse
g.s,rajan இந்தியப்பொருளாதாரம் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்(ICCU)வில் தற்போது உள்ளது ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜன-201415:37:57 IST Report Abuse
g.s,rajan மும்மூர்த்திகளும் சேர்ந்து "முடித்தனர்" நமது அருமையான இந்தியாவை ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
26-ஜன-201413:34:43 IST Report Abuse
S.MAHESH KUMAR அய்யா இந்த 'மும்மூர்த்தி'களால் நம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டதா என்பதற்கு விடை இன்று வரையில் தெரியவில்லை. ஆனால் நம் நாட்டினால் இந்த மும்மூர்த்திகளின் பொருளாதாரம் மட்டும் மேம்பட்டுள்ளது என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X