விழிப்புணர்வு போஸ்டரில் அமெரிக்க டாலர்| Dinamalar

விழிப்புணர்வு போஸ்டரில் அமெரிக்க டாலர்

Added : ஜன 27, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விழிப்புணர்வு போஸ்டரில் அமெரிக்க டாலர்

நாடு முழுவதும், நேற்று முன்தினம், வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. பொது மக்கள், ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அனைத்து பகுதிகளிலும், விழிப்புணர்வு பேரணி நடந்தது. அத்துடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்தப் போஸ்டர்களில், "விலை மதிப்பற்ற உங்கள் வாக்குகளைப் பணத்திற்கா விற்பது? உங்கள் வாக்கினைச் சரியாகப் பயன்படுத்தி, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம். வலுவான ஜனநாயகத்திற்குப் பெருமளவு பங்கேற்போம்' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதில், பல போஸ்டர்களில் அமெரிக்க நாட்டின் டாலர் நோட்டுகள் இரண்டு கட்டுகள் அடுக்கி வைத்து, அதில் "எக்ஸ்' குறி போடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்து பலரும் வியந்து போகின்றனர். தமிழகத்தில் கிராமங்கள் நிறைந்த இடத்தில், வாக்காளர்களுக்கு யார் டாலர் நோட்டுகள் கொடுப்பது என்று குழம்பிஉள்ளனர்.
இந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் அரசியல் பிரமுகர்கள் சிலர், இந்திய தேர்தல் ஆணையம், நம் நாட்டு ரூபாய் நோட்டுகளைப் போடாமல், அமெரிக்க நாட்டின் நோட்டுகளை, தேர்தல் விளம்பர போஸ்டரில் அச்சிட்டிருப்பது, ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என நினைக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayavaram seker - chennai  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-201420:00:48 IST Report Abuse
mayavaram seker ரிசர்வு வங்கியின் வருடம் போடாத இந்தி்ய ரூபாய் செல்லாமல் போகும் என்ற அறிக்கைப்படி டாலர்தான் செல்லுமோ என்னவோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X