Vijayakanth will join BJP alliance | ஊழலை எதிர்க்கும் விஜயகாந்த் பா.ஜ., கூட்டணிக்கே வருவார்: தமிழருவி மணியன் தகவல்| Dinamalar

ஊழலை எதிர்க்கும் விஜயகாந்த் பா.ஜ., கூட்டணிக்கே வருவார்: தமிழருவி மணியன் தகவல்

Updated : ஜன 27, 2014 | Added : ஜன 27, 2014 | கருத்துகள் (86)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஊழலை எதிர்க்கும் விஜயகாந்த் பா.ஜ., கூட்டணிக்கே வருவார்: தமிழருவி மணியன் தகவல்

திண்டுக்கல்: ஊழலுக்கு எதிராக போராடும் விஜயகாந்த், நிச்சயமாக பா.ஜ., கூட்டணிக்குத்தான் வருவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:பா.ஜ., ம.தி.மு.க., கூட்டணி முடிவாகி விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையில் நானும் பங்கேற்றேன். வைகோ கேட்ட தொகுதிகள் விரைவில் தரப்பட உள்ளது. சென்னையில் பிப்.8ல் மோடி அலை வீச உள்ளது. ம.தி.மு.க.,தொண்டர்களும், பா.ஜ.,வினரும் லட்சக்கணக்கில் பங்கேற்பார்கள். தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் விரைவில் பா.ஜ., கூட்டணிக்கு வரும். உளுந்தூர் பேட்டையில் ஊழலுக்கு எதிராக, முஷ்டியை தூக்கி யுத்தத்தை துவக்கியுள்ள விஜயகாந்த், ஊழலில் திளைத்த தி.மு.க.,வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி சேர மாட்டார். அவர் எடுக்கும் நல்ல முடிவு நிச்சயம் பா.ஜ., கூட்டணியாகத்தான் இருக்கும். தி.மு.க.,வுடன் அவர் கூட்டணி சேர்ந்தால், அவரே பள்ளத்தை தோண்டி அதில் விழுந்து, மண்ணை போட்டு மூடுவதற்கு சமமாகும்.

பா.ஜ., கூட்டணியை, அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக மக்கள் தேர்வு செய்ய உள்ளனர். மோடியால், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு 17 சதவீதம் செல்வாக்கு கூடியுள்ளது. பா.ஜ.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்தால், அ.தி.மு.க., அணியை விட அதிக தொகுதிகளை பெற முடியும். லோக்சபா தேர்தலில் மூன்றாவது இடத்தில் செல்வதை தவிர்த்து, இரண்டாவது இடத்தையாவது பெறத்தான் தி.மு.க., தே.மு.தி.க.,வை நாடுகிறது.முதல்வர் ஜெ., கடுமையான குழப்பத்தில் உள்ளார். கடந்த ராஜ்சபா தேர்தலில் சரவண பெருமாளை நியமித்து பின்பு நீக்கினார். தற்போது சின்னத்துரையை நியமித்து, அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். பாஸ்போர்ட் பெறுவதற்கு கூட போலீசார் விசாரணை உள்ளது.

போலீஸ்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் திடமான முடிவு எடுக்காமல் திணறுகிறார். தமிழர்களை பழி வாங்கிய காங்.,தி.மு.க.,வுக்கு இந்த தேர்தல்தான் கடைசி. ஒன்பதரை ஆண்டு கால காங்., ஆட்சியில் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. 81 கோடி மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளனர். நாட்டின் சீரழிவை தீர்க்க மோடியால் மட்டுமே முடியும் என இளைஞர்கள் எழுச்சி குரல் எழுப்புகின்றனர். அழகிரி நீக்கம் தந்தை, மகனுக்கும் ஏற்பட்ட உரசல். இது அவர்கள் குடும்ப விவகாரம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
28-ஜன-201401:02:43 IST Report Abuse
muthu Rajendran விஜய காந்த இவ்வளவு பிகு பண்ணுவதற்கு என்ன காரணம்? முன்பிருந்த செல்வாக்கு குறைந்துள்ளது. சாதுரியமான வழிகாட்டுதல் இல்லை. தனியாக நின்றால் பத்து சதவீத வாக்கு கிடைக்காது. எனவே ஒரு அணியில் அவர் சேருவது காலத்தின் கட்டாயம். . அதிமுகவுடன் இனி அவர் சேரமுடியாது சேர்ந்தாலும் நன்றாக இருக்காது. அடுத்து அவர் ஒன்று திமுக அணியுடன் சேரவேண்டும் அல்லது பா ஜா க கூட்டணியில் சேரவேண்டும். எங்கு அதிக இடங்கள் கொடுக்கிறார்கள் என்று பார்ப்பதை விட எதில் சேர்ந்தால் மரியாதையை இருக்கும் என்று பார்க்க வேண்டும். காரணம் அடுத்து சட்ட மன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு கிடைக்கும் மரியாதை இந்த தேர்தலில் அவர் எடுக்கும் முடிவை பொருத்தது. ரெம்பவும் எல்லோரையும் இழுத்தடிப்பது சரியல்ல. ஒரு முடிவுக்கு அவர் விரைவில் வருவது நல்லது.
Rate this:
Share this comment
Venkat - chennai,இந்தியா
29-ஜன-201412:38:53 IST Report Abuse
 Venkatபி.ஜே.பி.....பாவம்......இந்தக் கூட்டணியினால் வரும் தீமைகள் தேர்தலுக்குப் பின்னல் தெரியும்.....கோமாளியுடன் குடும்பம் நடத்த முடியாது.....கடவுளுடந்தான் கூட்டணி என்றவர்......கடவுளுக்கு தெரிந்து விட்டது போலும்....கூட்டணி வேண்டாம் என்று சொல்லி விட்டார் ........பாவம் பி.ஜே.பி......விதி வலியது...
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
27-ஜன-201421:07:11 IST Report Abuse
umarfarook எடியுரப்பாவை எதற்காக பா ஜ க வை விட்டு தூக்கினாங்க என்று மணியனுக்கு தெரியாது போல ஆமாம் இவருக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் ? எதற்கு காந்திய என்று பெயர் வைத்து இருக்கிறார் ?
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
27-ஜன-201420:54:41 IST Report Abuse
gmk1959 மணியண்ணன் நல்லவரு. 1 இவருக்கு விவரம் பத்தாது ??????????/// குவாட்டர் கேப்டன் இவருக்கு காந்தி மாதிரி தோணுது ?????????????/ இவரு வேற மாதிரி ????????????? மணி ?????????? போய் வேர வேலை பாரு சார் ????????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X