காரில் குண்டு வைக்க பயிற்சி| Dinamalar

காரில் குண்டு வைக்க பயிற்சி

Updated : பிப் 05, 2014 | Added : ஜன 29, 2014
Advertisement
காரில் குண்டு வைக்க பயிற்சி

அடுத்து அவர்களுக்கு, இந்து பெயர்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.கசாப்பின் இந்து பெயர் சமீர் சௌத்ரி, தினேஷ் சௌத்ரியின் மகன், பெங்களூர் அருணோதயா டிகிரி காலேஜ் ஆசிரியர்.
ஹைதராபாத் அருணோதயா டிகிரி கல்லூரியைச் சேர்ந்த விலாஸ் வர்மாவின் மகன் நரேஷ் வர்மா - இது இஸ்மாயில். இதே போல மற்றவர்களில் போலி இந்து பெயர்கள், பிற விவரங்களை கசாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். இந்தப் போலி அடையாள அட்டைகள் எல்லாமே அருணோதயா கல்லூரியைக் கொண்டே தயார் செய்யப்பட்டவை.
பின்னர் காஃபா இவர்களை மீண்டும் கராச்சி துறைமுகத்துக்கு இட்டுச்சென்றான். அவர்கள் ஒருநாள் கடலில் தங்கினார்கள். ஒரு காற்றடைத்த சிறிய படகைப் பிரித்து, மீண்டும் சரியாக அசெம்பிள் செய்வது, அதை ஓட்டுவது மற்றும் அதிலுள்ள கடல் வால்வை எடுத்து, அந்தப் படகை மூழ்கடித்துவிடுவது முதலிய பயிற்சிகள் ஹகீம் ஸாப் மூலம் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. வரைபடங்களில் உள்ள துலா (நெடுங்கோடு - வெர்டிகல்) மற்றும் சௌரைஸா (படுக்கைக்கோடு - ஹரிசான்டல்) பற்றியும் விளக்கப்பட்டது.


கராச்சியில் காத்திருப்பு:

ரோஸா 20வது நாள் லக்வீ அங்கு வந்து அவர்களிடம் வேலைகள் சிலகாலம் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகக் கூறினான். தாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென்று லக்வீயிடம் கசாப் கூறினான். தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்தைக் கச்சிதமாக, வெற்றியுடன் முடிப்போமென்றும், அதைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லையென்றும் கசாப் லக்வியுடன் உறுதி கூறினான். இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கத் தாங்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும், அதைத் தடை செய்ய வேண்டாமென்றும் கூறினான். இதைக்கேட்டு ஸகியுர் ரஹ்மான் லக்வீ பலமாகச் சிரித்துக்கொண்டே, கசாபின் மனோதிடம், உறுதி ஆரம்பம் முதலே தனக்குத் தெரியுமென்றும், அவன் உறுதியான ஜிகாதி என்றாலும் சற்று பொறுத்திருக்குமாறு கூறினான். மறுநாள் லக்வீ அங்கிருந்து சென்றுவிட்டான். இந்த முஜாஹிதீன்கள் அஸீஸாபாத் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நாட்களில் தங்களது அடையாள அட்டைப் பெயர்களை, விவரங்களை சரியாகத் திரும்பிச் சொல்லுமாறு இம்ரான் பாபர் கூறினான். இவர்களில் இம்ரான் பாபருக்கு மட்டுமே நல்ல கல்விப் பின்னணி இருந்ததால் அவனுக்குல் மட்டுமே ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும் தெரியும். அஸீஸாபாத் இல்லத்தில் ரம்சான் பண்டிகை கொண்டாடினார்கள்.


காரில் குண்டு வைப்பது எப்படி:

ஓடிக்கொண்டிருக்கும் காரில் எவ்வாறு வெடிகுண்டு வைப்பது, காரின் பின் சீட்டில் அமர்ந்து இருக்கும்போது, டிரைவர் சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு வைப்பது போன்ற "கலைகள்' இந்த நாட்களில் அபுஹம்ஸா இவர்களுக்குக் கற்பித்தான். ஏற்தாழ ஒன்றரை மாத காலம் இவர்கள் அஸீஸாபாத் இல்லத்தில் தங்கியிருந்தனர். நவம்பர் 18ம் தேதி நசீர் மற்றும் நசீர் அகமத் இருவரையும் அழைத்துக்கொண்டு காஃபா அந்த வீட்டிலிருந்து வெளியேறினான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X