Is Vijayakanth announce poll alliance in vilupuram meet? | கூட்டணி முடிவை மாநாட்டில் அறிவிப்பாரா? விஜயகாந்த் திட்டம் பற்றி புதிய தகவல் அம்பலம்| Dinamalar

கூட்டணி முடிவை மாநாட்டில் அறிவிப்பாரா? விஜயகாந்த் திட்டம் பற்றி புதிய தகவல் அம்பலம்

Updated : ஜன 31, 2014 | Added : ஜன 31, 2014 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Vijayakanth,poll alliance, vilupuram, meet, கூட்டணி, விஜயகாந்த், திட்டம்,புதிய தகவல், அம்பலம்

கூட்டணி விஷயத்தில், விஜயகாந்தின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.,வும், தூது மேல் தூது விட்டு வருகின்றன. ஆனாலும், எதற்கும் பிடிகொடுக்காமல், அந்தக் கட்சித் தலைவர், விஜயகாந்த் நழுவி வருகிறார்.




'ஊழல் எதிர்ப்பு மாநாடு':

அத்துடன், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், வரும் 2ம் தேதி நடக்கவுள்ள, தே.மு.தி.க., மாநில மாநாட்டில், கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்டு, முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார். பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறலாம் என்ற கருத்து, பரவலாக எழுந்துள்ளது. 'தே.மு.தி.க., மாநாட்டிற்கு, 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளதால், தங்களுடன் விஜயகாந்த், கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ., நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கூடுதல் தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவிற்கான நிதியை வழங்கினால், தே.மு.தி.க., தங்கள் பக்கம் சாயும் என, தி.மு.க., தலைமை நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன், அந்தக் கட்சியின் முக்கிய புள்ளிகள், தொடர்ந்து, தே.மு.தி.க., பிரமுகர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். கூட்டணி முடிவை, வரும் 2ம் தேதி, விஜயகாந்த் அறிவித்து விடுவார் என, அவரை கூட்டணிக்கு இழுக்க முற்பட்டு வரும் இருதரப்பினரும், நம்பும் நிலையில், விஜயகாந்த் முடிவு தொடர்பாக, மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபற்றி, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, சேலத்தில், தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அப்போது, கட்சியினரிடம் கூட்டணி பற்றி, விஜயகாந்த் கருத்து கேட்டார். தே.மு.தி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாக கையை உயர்த்தினர். இதையடுத்து, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டார்.




முடிவை அறிவிக்க மாட்டார்:

ஆனால், வரும் 2ம் தேதி, நடைபெற உள்ள மாநாட்டில், இரு கட்சிகளின் பெயரை கூறி, அதில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என, விஜயகாந்த் கருத்து கேட்பார். தொண்டர்கள், கையை உயர்த்தி கருத்து தெரிவித்தாலும், மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார். சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, முடிவை அறிவிப்பார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - thanjavur,இந்தியா
31-ஜன-201423:04:43 IST Report Abuse
Vinoth பரீட்சை விரைவில் வர உள்ளது. இவருகிட்ட பிட்டு பேப்பர் கொடுத்தா சரியா கூட பார்த்து எழுத தெரியலே. இன்னும் யோசிக்கிறேன் யோசிக்கிறேன் என்று சொல்லிகினே இருக்குறாரு. இவரு கண்டிப்பா பெயில் ஆக போறாரு. கடைசி வரை யோசிக்கிறேன் என்று தான் சொல்ல போறாரு பாருங்க.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
31-ஜன-201422:52:35 IST Report Abuse
Sundeli Siththar அப்படித்தான் சொல்லுவாங்க... இழுத்தடிச்சாதான், மதிப்பு கூடும் என்ற நினைப்பு. நடக்கட்டும்.. நடக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
arun ap - coimbatore ,இந்தியா
31-ஜன-201416:05:32 IST Report Abuse
arun ap குடிப்பது தப்பா, என்று கேட்கும் ஒரு கட்சி தலைவனிடம், கூட்டணி வைத்து கொள்ள துடிக்கும், தி.மு.கவினால் அதிசயம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பி ஜே பி ஏன் தள்ளாடுகிறது என்றுதான் தெரியவில்லை. ஏதோ, ஒழுங்காக கிடைக்கும் சில இடங்களும் , குடி தலைவரால் , அதுவும் கிடைக்காமல் போக போகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X