வருமான வரி வழக்கு: ஜெயலலிதாயின் பிரதமர் கனவுக்கு பின்னடைவா? - Jayalalitha | Dinamalar

வருமான வரி வழக்கு: ஜெ.,யின் பிரதமர் கனவுக்கு பின்னடைவா?

Added : பிப் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
வருமான வரி வழக்கு: ஜெ.,யின் பிரதமர் கனவுக்கு பின்னடைவா?

கடந்த, 1991 முதல் 1996 வரை, தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதாவும், அவரின் தோழி சசிகலாவும், நான்காண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக, வருமான வரித்துறை, இருவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு
விசாரணைக்கு, தடை உத்தரவு பெற்றார், ஜெயலலிதா. ஆனால், வழக்கின், மேல்முறையீட்டில், தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, வழக்கு விசாரணையை, நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், "முதல்வரின், பிரதமர் ஆசைக்கு பின்னடைவு ஏற்படும்' என, ஒரு தரப்பும், "இதெல்லாம் சாதாரண விஷயம்' என, மற்றொரு தரப்பும் கருத்து பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த இருதரப்பினரும், நம்மிடம் முன்வைத்த வாதங்கள் இதோ:

"வருமான வரித்துறை தொடர்ந்த இந்த வழக்கிற்கும், தி.மு.க., அரசுக்கு தொடர்பில்லை' என, கூறலாம். மத்திய அரசில், தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கருணாநிதியின் தூண்டுதலால் தான், வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்து உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு, வருமான வரி கணக்குகளை, ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என, வழக்குத் தொடர்ந்து உள்ளனர். வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் தொடரப் பட்டுள்ள இந்த வழக்கு, பிற குற்றங்களைப் போலவோ, இந்திய தண்டனைச் சட்டத்தில், கூறப்படுவதைப் போலவோ, மிகப் பெரிய கொடுஞ்செயல் அல்ல. இந்த குற்றச்சாட்டு குறித்து, வருமான வரித்துறை சட்டப்படி கூறினால், சாதாரண ஒரு குற்றச்சாட்டு. இதன்மூலம், ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடும்.
அவரின், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பாதிக்கப்படும் என்றெல்லாம், தி.மு.க.,வும், அதன் தலைவர் கருணா நிதியும் ஆசைப்படுவது போல், ஒன்றும் நடக்காது. இந்த வழக்கு, கீழ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதனால், வழக்கு குறித்து வேறு எதுவும் கூற முடியாது. ஜெயலலிதாவுக்கு எதிராக, தி.மு.க., பல வழக்குகளைத் தொடர்ந்தது. அதில், ஒவ்வொன்றாக ஜெயலலிதா விடுதலை பெற்று வருகிறார்.
அதுபோல, அரசியல் காழ்ப்புணர்ச்சி யில், தொடரப்பட்ட இந்த வழக்கி லும், அவர் விடுதலையாவார். அதற்கான, அனைத்து வாதங்களையும் நீதிமன்றத்தில் முன் வைக்க, ஜெயலலிதா தயாராக உள்ளார்.
அரசியல் ரீதியாக வெற்றி காண முடியாத, மக்கள் செல்வாக்கு இல்லாத தி.மு.க., ஜெயலலிதாவை, நீதிமன்றம் மூலம் வென்று விடலாம் என, கனவு காண்கிறது. இந்த அற்ப எண்ணம், எப்போதும் நிறைவேறாது. மக்கள் ஆதரவுடன், இந்தியாவை வழிநடத்தும் பணியில், ஜெயலலிதா ஈடுபடுவார்.

சேதுராமன், தலைவர், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு

ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்தபோது, 1992 முதல் 1996ம் ஆண்டு வரை, நான்கு ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என, வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்து உள்ளது. இந்த காலகட்டத்தில், தி.மு.க., மத்திய ஆட்சியில் அங்கம் பெறவில்லை. மாறாக, அப்போது பிரதமராக இருந்த, நரசிம்மராவ், ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட பிரதமராகவே இருந்தார். எனவே, இந்த வழக்கு, தி.மு.க., தூண்டு தலால், தொடரப்பட்ட வழக்கு என, பழி சுமத்துவது முறையற்றது.
எதற்கெடுத்தாலும், தி.மு.க., மீது பழிபோடும், ஜெயலலிதாவின் பாணியில், இந்த வழக்கிலும், தி.மு.க., மீது பழிபோடுகிறார் அவ்வளவு தான். குறிப்பிட்ட அளவுக்கு மேல், ஆண்டு வருமானம் உள்ளவர்கள், வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. இதை, முதல்வர் என்ற நிலையிலிருந்து, ஜெயலலிதா மீறிஉள்ளார். "தனக்கு எதுவும் பொருந்தாது' என, நினைப்பவர் தான் ஜெயலலிதா. அந்த எண்ணத்தில் தான், அரசு பொறுப்பில் உள்ளவர், அரசு நிலத்தை வாங்கக் கூடாது என்ற விதியை மதிக்காமல், டான்சி நிலத்தை வாங்கினார். நீதிமன்றம் தலையிட்ட பின், அந்த நிலத்தை திருப்பிக் கொடுத்தார். அதுபோலவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்தும் மீறியுள்ளார். அவர் முதல் முறை முதல்வராக இருந்தபோது, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் என, அறிவித்தார். ஆனால், ஐந்தாண்டு முடிவில், 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார். இது, எப்படி சாத்தியம் என, சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறை வழக்கின் போக்கையும், அண்மை காலங்களில், நீதிமன்றங்கள் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, பீகார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ், அரியானா முன்னாள் முதல்வர், சவுதாலா போன்றோரின் வரிசையில், தண்டனை பெறும் முதல்வராக, ஜெயலலிதாவும் இருப்பார் என்றே தோன்றுகிறது.

ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., சட்டப் பிரிவு செயலர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X