தேவர் சிலைக்கு தங்க கவசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவர் சிலைக்கு தங்க கவசம்

Added : பிப் 03, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, இம்மாதம் 9ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக, கடந்த 2010ம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என, அங்கு குழுமியிருந்த மக்களும், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமியும் வேண்டுகோள் வைத்தனர்.அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அ.தி.மு.க., சார்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என, தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாதம், 9ம் தேதி, பிற்பகல், 1:30 மணிக்கு, பசும்பொன் கிராமத்தில், தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthuppandy pandian - chennai,இந்தியா
11-பிப்-201412:41:24 IST Report Abuse
muthuppandy pandian அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட இக்கவசம் முழுக்க முழுக்க அதிமுக தொண்டர்களின் காசுதான் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. இதில் தனி தொகுதியாக உள்ள எத்தனையோ அடுத்த இனத்தவரின் சொத்தும் செர்ந்துதான் இப்பணம் முதல்வரின் கணக்கில் உள்ளது. 13 கிலோ தங்கத்தை இப்படி தானமாக கொடுத்துத்துள்ளார் முதல்வர். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் சொந்த உழைப்பு என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X