எழிலகம் "கல்சா மஹால்' சீரமைப்பு துவங்குகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எழிலகம் "கல்சா மஹால்' சீரமைப்பு துவங்குகிறது

Added : பிப் 06, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூன்றாண்டுகளுக்கு முன், தீ விபத்து நடந்த, சென்னை, எழிலக கட்டடத்தின் சீரமைப்பு பணி, இந்த வாரம் துவங்குகிறது. சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல கட்டடங்கள் உள்ளன. அதில், "கல்சா மஹால்' குறிப்பிடத்தக்கது. இங்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த தீ விபத்தில், ஒட்டு மொத்த கட்டடமும், முற்றிலும் சேதமானது. அதை சீரமைக்க, ஐதராபாத்தைச் சேர்ந்த, "குண்டு ராவ் அண்டு கோ' என்ற ஒப்பந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசு, 14.5 கோடி ரூபாய் ஒதுக்கியது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த, "கிருஷ்ணமூர்த்தி அண்டு கோ' என்ற ஒப்பந்த நிறுவனம், கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சீரமைப்புக்கான ஆயத்த பணிகளில், ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இன்னும், இரண்டு நாட்களில், சீரமைப்பு பணி துவங்கும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X