AAP govt loses majority, Independent MLA withdraws support | மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்; சுயேட்சை எம்.எல்.ஏ., ஆதரவுவாபஸ்| Dinamalar

மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்; சுயேட்சை எம்.எல்.ஏ., ஆதரவுவாபஸ்

Added : பிப் 10, 2014 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்; சுயேட்சை எம்.எல்.ஏ., ஆதரவுவாபஸ்

புதுடில்லி : டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர் சோக்கீன் வாபஸ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து கெஜ்ரிவால் அரசு மெஜாரிட்டியை இழந்தது.
டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆம் ஆத்மி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர்சோகீனும் ஆதரவு கொடுத்தனர். இதனையடுத்து 38 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, முதல்வர் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை சரியாக நிறைவேற்றவில்லை எனக்கூறி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முன்ட்கா தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., முதல்வர் கெஜ்ரிவால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி வந்தார். அவரும், வினோத்குமார்பின்னி மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ., சோயிப் இக்பால் ஆகியோரும், மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் குறைப்பு, பெண்கள் பாதுகாப்பு போன்ற உறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தவறினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என கூறி நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக ரம்பீர் சோகீன் நேற்று கூறினார். இது தொடர்பாகவும் கவர்னரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதன் படி, அவர் இன்று டில்லி துணை நிலை கவர்னரை சந்தித்து, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறினார்.
இதன் பின்னர் சோகீன் கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவால், தேர்தலுக்கு முன்னர் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை தீர்ப்போம் என உறுதியளித்தார். ஆனால் முதல்வராக பதவியேற்று இத்தனை நாளாகியும் தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியதால் தான் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக கூறினார். இதனையடுத்து கெஜ்ரிவால் அரசு மைனாரிட்டி அரசாக மாறியது. இதனையடுத்து தற்போது அரசுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் கட்சியின்8 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு எம்.எல்.ஏ., என36 பேரின் ஆதரவு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Balakrishnan - Chennai,இந்தியா
11-பிப்-201416:15:33 IST Report Abuse
M.Balakrishnan காங்கிரசின் கைவண்ணம். பின்புலத்தில் சதி செய்வது காங்கிரசுக்கு கைவந்த கலைதானே
Rate this:
Share this comment
Cancel
Bellie N - Coimbatore,இந்தியா
11-பிப்-201412:40:12 IST Report Abuse
Bellie N சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது இதன் மூலம் நிரூபிக்க பட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
11-பிப்-201412:31:45 IST Report Abuse
T.Indran "படித்தால் மட்டும் போதுமா" படத்தில் சிரிப்பு நடிகர்கள், பாடி ஆடும் காட்சியை, கெஜ்ரிவால் அரசியலை நினைவு படுத்தும் விதமாக, இந்த பாடல் அமைக்க பட்டுள்ளது. கோமாளி கோமாளி கோமாளி, கோமாளி கோமாளி கோமாளி,டெல்லி செய்த கோமாளி தனத்தில் ஊழல் பிறந்தது. ஐயா ஊழல் செய்த கோமாளி தனத்தில், குழப்பம் பிறந்தது. குழப்பம் செய்த கோமாளி தனத்தில் ஆம் ஆத்மி பொறந்தது. கேசரிவாலின் கோமாளி தனத்தில் ஆட்சி பொறந்தது. கோமாளி கோமாளி கோமாளி, கோமாளி கோமாளி கோமாளி. படித்தவர் கூட்டம் இருக்கின்ற இடத்தில் முழிப்பவன் கோமாளி. இந்த கேசரிவாலின் அருகில் இருந்தால் எல்லோரும் கோமாளி. படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன் முதல் தர கோமாளி. மெத்த படித்தவன் போலே நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி. விளம்பரம் தேடி அலைபவன் எவனும் நிரந்தர கோமாளி. கேனத்தனமாய் ஆட்சியை நடத்தி இழப்பவன் கோமாளி. தினம் அடுக்கடுக்காக பொய்களை சொல்பவன் அராஜக கோமாளி. கோமாளி கோமாளி கோமாளி, கோமாளி கோமாளி கோமாளி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X