Leaders of JD(U), Left, JD(S) meet to push Third Front idea | மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை| Dinamalar

மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
 JD(U), Left, JD(S) Third Front idea,மூன்றாவது அணி,  பேச்சுவார்த்தை மும்முரம், நிதிஷ்குமார், கம்யூ., தலைவர்கள்

புதுடில்லி : காங்., - பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைப்பது குறித்து, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமார், இடதுசாரி கட்சி தலைவர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக, வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணியை உருவாக்கு வதற்கான நடவடிக்கைககள், தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. இடதுசாரி கட்சி தலைவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


'பிரேக்பாஸ்ட் மீட்டிங்':

கடந்த 5ம் தேதி, டில்லியில், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, அ.தி.மு.க., அசாம்கன பரிஷத், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட, 11 கட்சிகளின் பிரதிநிதிகள், ஆலோசனை நடத்தினர்.முதல் கட்டமாக, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரில், ஒருங்கிணைந்து செயல்படுவதென, இந்த கட்சிகள் முடிவு செய்தன.இந்நிலையில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, நிதிஷ் குமார், நேற்று டில்லி வந்திருந்தார். அவரை, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூ., மூத்த தலைவர் ஏ.பி.பரதன், பார்வர்ட் பிளாக் பொதுச் செயலர், தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர், சந்தித்து பேசினார்.'பிரேக்பாஸ்ட் மீட்டிங்' என்ற பெயரில், காலை உணவுடன் நடந்த இந்த சந்திப்பில், மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, முக்கிய விவாதம் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த 11 கட்சிகளும் இணைந்து, மூன்று அல்லது நான்கு இடங்களில், பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பிரகாஷ் கராத் கூறுகையில்,''இது, அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு. மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, இதில் பேசினோம். இதற்கான வாய்ப்புகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டில்லி வந்திருந்ததால், இந்த சந்திப்புக்கான வாய்ப்பு கிடைத்தது,'' என்றார்.


முக்கிய ஆலோசனை:


மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான, தேவகவுடா கூறுகையில், ''பார்லி., கூட்டத்தொடர் முடிந்ததும், மூன்றாவது அணியில் உள்ள அனைத்து தலைவர்களும், லோக்சபா தேர்தல் தொடர்பாக, டில்லியில், முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளோம்,'' என்றார்.

நவீன் பட்நாயக், ஒடிசா முதல்வர் - பிஜு ஜனதா தளம்: பிரதமராகும் ஆசை, எனக்கு இல்லை. காங்., கட்சி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு இழந்து விட்டது. ஒடிசாவில், அந்த கட்சி, இருந்த இடமே தெரியவில்லை. ஆனால், அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், எங்களை குறை கூறுவது, வேடிக்கையாக உள்ளது.

சீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்: காங்., - பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை உருவாக்குவது என்பது, லோக்சபா தேர்தலுக்கு பின் தான், சாத்தியம். இதற்கு முன்னும், மூன்றாவது அணிகள், இப்படித் தான் உருவாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
omkaara sankaraa - Lyon,பிரான்ஸ்
12-பிப்-201405:16:27 IST Report Abuse
omkaara sankaraa மூன்றாவது அணி, காங்கிரெஸ் bis முட்டாள்களின் கனவு அணி, குழப்ப அணி, காங்கிரெஸ்ஐ விட மோசமான ஊழல் அணி, நாட்டு மக்கள் உசார் ஆகி விட்டார்கள், உங்கள் எந்த பருப்பும் இனி வேகாது.....
Rate this:
Share this comment
Cancel
lpmuthukumar - Jakartha,இந்தோனேசியா
11-பிப்-201417:11:13 IST Report Abuse
lpmuthukumar மாதம் ஒரு பிரதமர் கிடைப்பார். ஏற்கனேவே சுண்டைக்காய் நாடு நம்மளை பூச்சாண்டி காட்டுது. மூன்றாவது அணி முட்டாள்களின் கனவு அணி.
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201415:39:30 IST Report Abuse
S. ரெகுநாதன் உருப்படாத கூட்டணி...இந்தியாவை இன்னமும் 20-25 வருடங்கள் பின்னோக்கி இழுத்துசெல்லும் வல்லமை...எந்த வளர்சிகளையும் முன்னெடுத்து செல்ல வக்கில்லாத...சொந்த கட்சிகளின் தலைவர்களின் சுய அபிலாஷைகளை பூர்த்திசெய்து...காங் கட்சி தயவில் மத்தியில் குளிர்காய்ந்து ஊழல் பெருச்சாளிகளை மாநிலவாரியாக வளர்த்துவிடும் மாநிலக்கட்சிகளின் கிச்சடி கூட்டணி...இந்த பெருமைகளை கொண்ட மூன்றாவது அணிக்கு உண்மையான தேசபக்தி உள்ள எந்த ஒரு இந்தியனும் ஓட்டு போடகூடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X