தினமலர் செய்தி எதிரொலி : சீமைக் கருவேல மரங்களை அகற்ற தாமதம் ஏன் : ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி : சீமைக் கருவேல மரங்களை அகற்ற தாமதம் ஏன் : ஐகோர்ட் உத்தரவு

Added : பிப் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டனர். நேற்று விசாரணையில்,இம்மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏன்?, தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
மதுரை சம உரிமை அமைப்பு செயல் இயக்குனர் ஆனந்தராஜ், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும், என ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

ஜன.,9 ல் பெஞ்ச் உத்தரவு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குனர் பிரஜேந்திர நவ்நீத், 2013 அக்.,30 ல் அனைத்து கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், நிலத்தில் நீரில்லாத போது, காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, சீமைக் கருவேல மரங்கள் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றன. பிராண வாயுவை மிகக்குறைந்த அளவும், கரியமில வாயுவை அதிகளவிலும் வெளியிடுகின்றன. காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடைகிறது. வேலி கருவேல மரங்களை அகற்றினால்தான், நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்ற கலெக்டர்கள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, வைகை ஆற்றிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டது. நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள்: அரசுத்தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? அரசு வக்கீல்: நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள்: போர்க்கால அடிப்படையில் அகற்ற, உத்தரவிட்டோம்; இதில் தாமதம் ஏன்? இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பிப்.,17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X