பெப்சி குடித்த சிறுமி பலியான வழக்கு : கடை உரிமையாளர், வினியோகஸ்தர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெப்சி குடித்த சிறுமி பலியான வழக்கு : கடை உரிமையாளர், வினியோகஸ்தர் கைது

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கடலூர்,: நெய்வேலி அருகே, பெப்சி குளிர்பானம் குடித்த, சிறுமி இறந்ததை அடுத்து, கடை மற்றும் வினியோகஸ்தரின் குடோனுக்கு, சீல் வைக்கப்பட்டது. இருவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயக்கம் : கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் காலனியைச் சேர்ந்த, அஞ்சாபுலி, நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள கடையில், பெப்சி குளிர்பானத்தை, வீட்டிற்கு, வாங்கிச் சென்றார். அதை, அவரது மனைவி மற்றும் மகள்கள், லலிதா, 10, அபிராமி, 8, கவுசல்யா, 6, மகன், பரமசிவம், 3, ஆகியோர் குடித்துள்ளனர். சற்று நேரத்தில், நான்கு குழந்தைகளும், மயங்கி விழுந்தனர்.
உடனே, நான்கு பேரும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிறுமி, அபிராமி இறந்தார்.

குடோனுக்கு, சீல் : இதையடுத்து, ஆட்சியர், கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால் மற்றும் மருத்துவக் குழுவினர், மற்ற மூன்று குழந்தைகளையும், மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சிறுமி அபிராமி இறப்பிற்கு காரணமான, குளிர்பானத்தை, விற்பனை செய்த, சேப்ளாநத்தத்தில் உள்ள கடை மற்றும் குளிர்பானத்தை சப்ளை செய்த, வடலூரைச் சேர்ந்த, வினியோகஸ்தரின் குடோனுக்கு, சீல் வைத்தனர்.
மேலும், அதே, பேட்ஜில் தயாரித்து, வினியோகிக்கப்பட்ட, குளிர்பானங்களை, 40 கடைகளில் இருந்து, பறிமுதல் செய்தனர். சிறுமி அபிராமி, குளிர்பானம் குடித்த, அன்று இரவு, அவர் சாப்பிட்ட, உணவுகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள, பெப்சி கம்பெனியில் இருந்து, குளிர்பானத்தின் மாதிரியும், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடை உரிமையாளர், நாகரத்தினம், வடலூரைச் சேர்ந்த வினியோகஸ்தர் பாபு ஆகியோரை, மந்தாரக்குப்பம் போலீசார், கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-பிப்-201407:18:24 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எனக்கும் அனுபவம் உண்டு. காலாவதி ஆனதுன்னு தெரிஞ்சதால் ஒருவாய் குடித்ததுமே தெரிஞ்சுது. கடைக்காரரிடம் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லே. என்ன செய்வது... 10 ரூபாக்கு கணக்கே வேண்டாம்னு பாட்டிலோட சாகடைல கொட்டினால் கிளம்பிச்சு புகை. பயந்துட்டோம் கடைக்காரர் உட்பட. அவரிடம் கேட்டேன் ஐயா இத குடிச்சுருந்தா என் கதி என்னா ஆயிருக்கும்னு , காஸ் ஆயிட்ட இதை குடிப்பேன் வயறு சித்த தொல்லை தர்ரதுன்னு இப்போ சுத்தமா இதை தொடுறதே இல்லே. சுக்கு தண்ணியோ ஜீரா கஷாயமோ தான்
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
12-பிப்-201406:14:21 IST Report Abuse
Ajaykumar பெப்சி சிறுவர்களுக்கு வேண்டாமே, யாரோ ஒருவன் காசுக்காக விளம்பரத்தில் நடிப்பதை பார்த்து வாங்குவதால் நமக்கென்ன பயன்?
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Annamalai - chennai,chitlapakkam,இந்தியா
11-பிப்-201421:31:11 IST Report Abuse
Balasubramanian Annamalai நான் சென்னையில் ஒரு முறை மிரிண்டா( மிரண்ட ) குளிர்பானம் வாங்கினேன் கொஞ்சம் குடித்து விட்டோம் 2 ltr. ஆனால் அது காலாவதி ஆனது. கடைக்காரர் திருப்பி வாங்க மறுத்து விட்டார். எனவே அரசு சோதனை செய்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை