புதினா கட்டுக்குள் பாம்பு!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதினா கட்டுக்குள் பாம்பு!

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புதினா கட்டுக்குள் பாம்பு!

கோவை: கோவையில், உழவர் சந்தையில் வாங்கிய புதினாவை, வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது, அதனுள் சுருண்டு படுத்திருந்த, அரிய வகை பாம்பு.
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்தவர், அச்சுதன் மனைவி, சாந்தி. கடந்த திங்கட்கிழமை, உழவர் சந்தையில், புதினா கீரை வாங்கியவர், குளிர்சாதன பெட்டியில் வைத்தார். நேற்று காலை, புதினா கட்டை பிரித்த போது, கருப்பு, வெள்ளை நிற வரிகளுடன், 1 அடி நீள பாம்பு சுருண்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்தவர், பாம்பை டப்பாவில் போட்டு பாதுகாப்பாக வைத்து, பாம்புகளை பாதுகாக்கும், "மதர் ஆப் ஆல் ஸ்னேக்ஸ்" அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். ஆனைகட்டியிலுள்ள வனப்பகுதியில், பாம்பை விட்ட, அந்த அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் கூறியதாவது: புதினாவில் இருந்த பாம்பின் பெயர், "காமன் பிரைடல்!' அலங்கார வகை, அரிய பாம்பு. அதிகபட்சமாக, 1 அடி நீளம் தான் வளரும்; விஷம் இல்லாதது. மிகவும் குளிர்ந்த பகுதியில் மட்டுமே வாழும். 1,500 அடி உயர மலைப்பகுதிகளிலும், எஸ்டேட்டிலும் தென்படும். புதினா எளிதில் வாடாது, அதிக மணம் கொண்டதால், அதனுள் இருந்துள்ளது. பிடிபட்ட பாம்புக்கு, 4 வயது இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-பிப்-201412:32:02 IST Report Abuse
Pasupathi Subbian புதினா வாங்கினால் பாம்பு இனாம். நல்ல ஆபர் . ரிலையன்ஸ் கம்பனி உடனே இந்த ஆபரை நடைமுறைபடுத்தி விளம்பரம் செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X