Vijayakanth proud about PM | 'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்!': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்| Dinamalar

'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்!': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்

Added : பிப் 14, 2014 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்!': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்

தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை பிரச்னை உட்பட, பல விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மன்மோகனுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், இரு முறை கடிதம் எழுதினார். அதற்கு எந்தப் பதிலும் இல்லை.அதனால், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், பிரதமரைசந்திக்க அனுமதி கோரி, இரு மாதங்களுக்குமுன், விஜயகாந்த் மீண்டும் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்திற்கு,பிரதமரிடம் இருந்து பதில் வந்தது. நேற்று பிரதமரை சந்திக்க, விஜயகாந்திற்குஅனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 20 பேருடன், நேற்று முன்தினம் இரவு டில்லி சென்றார்.தே.மு.தி.க., மேலிட ஏற்பாட்டில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாமலேயே, டில்லி பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதனால், விமானத்தில் ஏறும் வரை, எந்த நிறுவன விமானத்தில் பயணிக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே, எம்.எல்.ஏ.,க்கள், சென்னை விமானம் நிலையம் சென்று,அங்கிருந்து, டில்லி சென்றனர்.

டில்லி விமான நிலையம் சென்றடைந்ததும், எம்.எல்.ஏ.,க்களிடம் பேசிய விஜய காந்த், 'அனைவருக்கும், தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தில், அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன; அங்கு சென்று ஓய்வெடுங்கள். நான் சொல்லும் வரை, யாரும், அங்கிருந்து வெளியே செல்லக்கூடாது' என, தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நேற்று காலை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிரதமர் இல்லம் செல்ல, அங்கே தயாராக இருந்தனர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர்.பின், பிரதமர் இல்ல கூட்ட அரங்கில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அப்போது, சுடச்சுட மசாலா டீ, காபி, மெதுவடை, தேங்காய் பர்பி, முந்திரி பிஸ்கெட், பட்டர் பிஸ்கெட் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர், சரியாக, 11:10 மணிக்கு அவர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, தமிழக பிரச்னைகள் தொடர்பாக, புகார் மனு ஒன்றை அளித்த விஜயகாந்திடம், 'முதல்வர் ஜெயலலிதா, பலமுறை கடிதங்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், நீங்கள் எம்.எல்.ஏ.,க்களுடன், என்னை சந்திக்க வந்தது வரவேற்கத்தக்கது. அடுத்த முதல்வராக, நீங்கள் வரவேண்டும். நீங்கள் முதல்வரானால், தமிழக பிரச்னைகள் தீரும் என, நினைக்கிறேன்' என, பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். அதற்கு விஜயகாந்த், ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னேற்பாடாக சென்ற விஜயகாந்த், பிரதமரிடம் புகார் மனுவை அளித்த போது, ஒவ்வொரு பிரச்னை குறித்தும் ஆங்கிலத்திலேயே பிரதமருக்கு விவரித்துள்ளார். இடைஇடையே, அவர் தடுமாறிய போது, பிரேமலதா அவருக்கு உதவியுள்ளார். விஜயகாந்த் புகாரை கேட்ட பிரதமர், 'தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என, கூறியுள்ளார். இதையடுத்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்து விட்டு அனைவரும் வெளியே வந்துள்ளனர்.

பிரதமரை சந்தித்த பின், நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த், ''தமிழக பிரச்னைகள் குறித்து, முதல்வர், ஜெயலலிதா கடிதம் மட்டுமே அனுப்புகிறார். நீங்கள் என்னை நேரில் வந்து பார்க்கிறீர்கள். தமிழக முதல்வராக, நீங்கள் இருந்திருந்தால், முன்னதாகவே வந்திருப்பீர்கள். நீங்கள் தமிழக முதல்வராக வேண்டும் என்பதே, என், ஆசை,'' என, தெரிவித்ததாக, விஜயகாந்த் அலட்டலாகத் தெரிவித்தார்.இன்று, ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்கவும், விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-பிப்-201408:25:36 IST Report Abuse
raghavan மண்மோகன்ஜி, உங்களுக்கே பதவி இன்னும் சொச்ச நாள்தான்,பேசாம நீங்கதான் அடுத்த பிரதமரா வரணும்னு சொல்லி இருக்கலாமே. இதுல என்ன கஞ்சத்தனம் ?
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
15-பிப்-201408:16:24 IST Report Abuse
Krish மண் மோகன் இவ்வளவு பேசினார் என்று சொல்வதை பிரதமரின் மனைவியே நம்பமாட்டார்...நல்ல சர்தார்ஜி ஜோக்...
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
15-பிப்-201408:16:01 IST Report Abuse
raghavan எம் எல் ஏ க்களக்கு முன் கூட்டியே தெரியாம பயணமாம், பாவம் எதுக்கும் கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க. திடீர்னு ஒரு நாள், இன்று தாலிபான்களை மீட் பண்ண ஆப்கானிஸ்தான் போறோம்னு எல்லோரையும் கூட்டிகிட்டு கிளம்பிட போறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X