Is vijayakanth seek congress help? | காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி| Dinamalar

காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி

லோக்சபா தேர்தல் கூட்டணி விஷயத்தில், எந்தக் கட்சிக்கும் பிடிகொடுக்காத விஜயகாந்த், கடந்த 13ம் தேதி, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி சென்று, மறுநாள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழக பிரச்னைகள் குறித்து பேசினார்.

அத்துடன், காங்., மேலிட தலைவர்களைச் சந்திக்க, அவர் முயற்சித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களுக்காக, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் மற்றும்
முக்கிய தலைவர்கள், மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதால், விஜயகாந்தால், யாரையும் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், காங்., இரண்டாம் மட்ட தலைவர்கள் மூலம், விஜய காந்த் கோரிக்கை ஒன்றை வைத்ததாக, புரளி கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஊழல் விவகாரத்தால், துவண்டு கிடக்கும் தி.மு.க.,விற்கு, ஆதரவு தெரிவித்து, அக்கட்சி, அதிக எம்.பி.,க்களைப் பெற, நாம் ஏன் உதவ வேண்டும் என, விஜயகாந்த் கணக்கு போடுகிறார். அதனால், லோக்சபா தேர்தலை தனித்து எதிர்க்கொள்ளலாமா என்ற யோசனையில் உள்ளார். அப்படி, தனித்து நின்றால், தேர்தலுக்கு நிறைய செலவாகுமே என்றும் கவலைப்படுகிறார்.அதனால், தே.மு.தி.க.,வும், காங்கிரசும், தமிழகத்தில் தனித்தனியே, தேர்தலை சந்திப்பது, ஒருவருக்கொருவர் மறைமுக ஆதரவு தெரிவிப்பது; அதற்கேற்ற வகையில், ரகசிய உடன்பாடு அடிப்படையில், வேட்பாளர்களை நிறுத்துவது என்றும், இதற்கு காங்., சம்மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, காங்., இரண்டாம் மட்ட தலைவர்களிடம், விஜயகாந்த் முன்வைத்துள்ளார். அதற்கு, காங்., தரப்பில், எந்த பதிலும் இல்லை. அதனால், விரக்தி அடைந்த விஜயகாந்த், வெறுப்பில் சென்னை திரும்பி விட்டார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
19-பிப்-201400:54:06 IST Report Abuse
Selvam Palanisamy பிரதமர் உடன் நின்று போட்டோ எல்லாம் எடுத்திருக்கிறேன் என்று வருங்காலத்தில் காட்டிக்கொள்ள மட்டும் இந்த சந்திப்பு இவருக்கு உதவும்.
Rate this:
Share this comment
Cancel
ramesh - viruthachalam,இந்தியா
19-பிப்-201400:01:39 IST Report Abuse
ramesh கேப்டன் நாங்க இருக்கோம்
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
18-பிப்-201409:42:59 IST Report Abuse
s.p.poosaidurai கையை முன்னாள் கட்டி பின்னால் கட்டி பேசினாலும் தலையை குனிந்து நின்று காலில் விழுந்து வணங்கி பேசுனாலும் காரிய வெற்றி இல்லை என்பது விஜயகாந்தை கடுப்பு ஏற்றி உள்ளது டெல்லி பயணம். டெல்லி பயணம் வெற்றிகரமாக நடக்ககூடாது என்று தமிழக மாற்று அரசியல் தலைவர்கள் தூது விட்டு கொண்டு இருப்பது விஜயகாந்த் கண்ணுக்கு பார்வை படவில்லை. விஜயகாந்து சாதாரண பார்வை குறைவு. அப்பறம் எப்படி ஞான பார்வை பார்க்க முடியும். விஜயகாந்த் குடும்பத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அது வழுக்கி விடப்படும். இந்த தருணம் அரசியல் முதிர்ச்சி பெற்ற குறைந்தது 10 மேற்பட்ட அரசியல் அனுபவமுள்ள நல்லவர்களை நண்பர்களாக அரசியல் ஆலோசகராக வைத்துகொண்டு அரசியல் செய்தால் ஒவ்வொரு தடைகர்களையும் தகர்த்து எறிந்து வெற்றி நடை போடமுடியும். இல்லையென்றால் சறுக்கி சரிவை பெறமுடியும். கூட கூட்டிகிட்டு போய் இருந்த சற்றமன்ற உறுபினர்களை மொழி தெரியாத மாநிலத்தில் ரயிலுக்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுக்காமல் அந்தரங்கத்தில் தவிக்க விட்டுவன்தீர்களே.பாவம் அவர்கள் அழுகாத குறையாக பொலம்புவது உங்களுக்கு ரசனையாக இருக்கலாம் இதையும் மாற்று கட்சியினர் திரித்து பேசுவார்கள் இதே கூட உங்கள் மனைவியும் மச்சுனனும் இல்லாமல் வேறு தலைவர்கள் வந்து இருந்தால் மற்ற சற்றமன்ற உறுபினர்களை விட்டு விட்டு வருவார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X