Ramdoss adamant to BJP over alliance | சமுதாய கூட்டணிக்கும் 'சீட்' : பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம்| Dinamalar

சமுதாய கூட்டணிக்கும் 'சீட்' : பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம்

Added : பிப் 18, 2014 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சமுதாய கூட்டணிக்கும் 'சீட்' : பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம்

'தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உடன் இனி கூட்டணி சேர்வதில்லை' என்பதில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் உறுதியாக இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதில், அந்தக் கட்சியின், இளைஞர் அணி செயலர், அன்புமணி ஆர்வம் காட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு, 'சமீபத்தில் உருவாக்கப்பட்ட, சமுதாய கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும்' என, குரல் எழுப்பினார். ஆனாலும், பா.ஜ., தலைவர்கள் விளக்கியதன் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கூட்டணிக்கு ரகசிய ஒப்புதல் அளித்தார்.அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவது சந்தேகமாகி வருவதால், பா.ம.க.,வும் திடீர் பந்தா காட்ட துவங்கியுள்ளது.பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், தங்கள் கட்சி சார்பில், ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட, 10 தொகுதிகளையும், தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, கேட்டனர். அதை பரிசீலிப்பதாக, பா.ஜ., தலைவர்கள் உறுதியளித்தனர்.அதேநேரத்தில், சமுதாய கூட்டணி சார்பில் தான், போட்டியிட வேண்டும் என்பதில் குரு உறுதியாக இருக்கிறார்.

பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், இதை வலியுறுத்தி பிரசாரமும் செய்து வருகிறார். அதனால், குருவை திருப்திப்படுத்த, புதிய அணுகுமுறையை, ராமதாஸ் கையில் எடுத்துள்ளார்.அதாவது, பா.ஜ., கூட்டணி யில், பா.ம.க.,விற்கு, 10 தொகுதிகளும், சமுதாய கூட்டணிக்கு, நான்கு தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என, அவர் நிர்பந்தம் செய்து வருகிறார். ஆனால், 14 தொகுதிகளை கேட்கும், பா.ம.க.,விற்கு, பா.ஜ., தலைவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையே, மாவட்ட மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ராமதாஸ் திருவண்ணாமலையிலும், வன்னிய சங்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, குரு கிருஷ்ணகிரியிலும், அன்புமணி சென்னையிலும் உள்ளனர். ஆளுக்கு ஒரு பக்கம் பா.ம.க., தலைவர்கள் இருப்பதால், கூட்டணி முடிவு எடுப்பதில் இழுபறி நிலவுகிறது. இது, பா.ம.க., நிர்வாகிகளை கடும் குழப்பத்தில் ஆழ்த்திஉள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எமதர்மா - - CHENNAI,இந்தியா
02-மார்-201410:43:54 IST Report Abuse
எமதர்மா - மற்ற கட்சிகளில் இருக்கும் வன்னியர்களைவிட பா. ம க வில் இருக்கும் வன்னியர்களின் எண்ணிக்கை குறைவுதான். நாங்கள் கூட்டணியில் இருந்ததால்தான் பா ஜ க வென்றது என்ற வழக்கமான வெற்றிக்கூட்டணி என்று அப்பட்டமான ஒரு பொய்யை ராமதாஸ் வெளியிடுவார். அரசியல் ஒரு சாக்கடை என்றால் சாதி கட்சிகள் ஒரு செப்டிக் டேங்க். அதை மூடியேதான் வைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
18-பிப்-201418:41:04 IST Report Abuse
Natarajan Ramanathan ராமதாசும் அன்புமணியும் படித்தவர்கள். கொஞ்சம் சிந்திக்கவேண்டும். குரு இருக்கும்வரை பாமக நிச்சயம் உருப்படாது. நாங்களும் ஒட்டு போடமாட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
Najimudeen - Kuwait,குவைத்
18-பிப்-201410:10:34 IST Report Abuse
Najimudeen ஏன் பி.ஜி.பி நிலைமை இப்படி போச்சி பாவம், போகிற போக்கை பார்த்த பி.ஜி.பி டெப்பாசிட் வாங்குவது கூட நடக்காது என்று நின்னைக்கிறேன். என்னமோ மோடி அலை என்று சொல்கிறார்கள் அதெல்லாம் சும்மா மீடியாதான் சொல்லுது........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X