குடிநீர் திட்டத்திற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் திட்டத்திற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

Added : மார் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சியில், வறட்சியை சமாளிக்கும் குடிநீர் திட்டத்திற்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம், தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: தங்கராஜ்: பேரூராட்சி நிர்வாகத்தின் பயன்பாட்டிற்கு தரமான பொருட்களை வாங்க வேண்டும். குடிநீர் வினியோகம், எலக்ட்ரிக் பயன்பாடுகளுக்கு வாங்கப்படும், பொருட்கள் சில நாட்களில் சேதம் அடைகின்றன. பழனிச்சாமி: தரமான பொருட்களை ஆண்டிபட்டியில் வாங்குவதை தவிர்த்து, ஏன் தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் வாங்க வேண்டும்.செயல் அலுவலர்: குறிப்பிட்ட சில பொருட்களை பதிவு பெற்ற நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும். அந்த நிறுவனங்கள் வெளியூரில் உள்ளன. வீரன்: பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னன்: பேரூராட்சி 8வது வார்டில், சுகாதாரக்கேடு அதிகம் உள்ளது. குடிநீர் பிரச்னையும் உள்ளது. பேரூராட்சி கண்டு கொள்வதில்லை. தலைவர் பால்பாண்டியன்: 8வது வார்டு பகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.காசிராஜன்: தேனி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் தேவை அதிகம் உள்ளது. வறட்சியை எப்படி சமாளிப்பது.தலைவர்: பேரூராட்சியில் வறட்சியை சமாளிக்க, ஆழ்குழாய்கள் அமைக்க ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆழ்குழாய்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை