வேட்பாளர்களுக்கு பணம்: ஆணைய உத்தரவு அமலாகுமா?| Dinamalar

வேட்பாளர்களுக்கு பணம்: ஆணைய உத்தரவு அமலாகுமா?

Added : மார் 02, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வேட்பாளர்களுக்கு பணம்: ஆணைய உத்தரவு அமலாகுமா?

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகளுக்கான, புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், "தேர்தல் செலவுக்காக, வேட்பாளர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க விரும்பும், அரசியல் கட்சிகள், அத்தொகையை ரொக்கமாக தரக்கூடாது. காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ, வங்கி பரிவர்த்தனை மூலமாக அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி போடவே, தேர்தல் ஆணையம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக, ஒரு தரப்பில் கூறப்பட்டதாலும், இந்த உத்தரவை அமல்படுத்துவதில், சிரமங்கள் ஏற்படலாம் என, மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு செய்யும் செலவை கட்டுப்படுத்த, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்பை எப்படி அமல் செய்யப் போகின்றனர். அதற்கு, உரிய ஊழியர்கள், அதிகாரிகள் இருக்கின்றனரா என்பது தான் இப்போதைய கேள்வி.
சட்டசபை தேர்தல் ஆனாலும் சரி, லோக்சபா தேர்தல் ஆனாலும் சரி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளில், பெரும்பாலானவர்கள், மாநில அரசு ஊழியர்கள். இவர்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதல், தேர்தல் முடியும் நாள் வரையே, தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றுவர்.
இந்த குறுகிய காலத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை, முறையாக நடைமுறை செய்வரா என்ற கேள்வி எழுகிறது. மாநில அரசு ஊழியர்கள், எந்தக் கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ, அந்த கட்சிக்கு சாதகமாகவே செயல்படுவர். தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றும் மிகக் குறுகிய காலத்தில், மாநில அரசுக்கு எதிராக பணியாற்றிவிட்டு, மீதமுள்ள காலத்தில், மாநில அரசுக்குக் கீழ் பணியாற்ற முடியாது.
எனவே, மாநிலத்தில் ஆளும் கட்சி எதுவோ, அதற்கு சாதகமாகவே இருப்பர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட, மாநில முதல்வரின் பிறந்த நாளுக்கு, மரக்கன்று நட்டு, இனிப்பு வழங்கும் நிலையில் உள்ளனர். ஆனால், மத்திய அரசு ஊழியர்கள், பிரதமர் அல்லது அமைச்சர் பிறந்த நாளை கொண்டாடுபவர்களாக இல்லை. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர் மட்டுமே, வெளிமாநில அதிகாரியாக இருப்பார். பணம் பட்டுவாடா குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் நினைத்தால் கூட, அவரின் உத்தரவை செயல்படுத்துபவர்கள், மாநில அரசு ஊழியர்கள். அவர்கள், ஆணையத்தின் நடவடிக்கையை, அரசியல்வாதிகளுக்கு தெரிவித்து, காப்பாற்றி விடுவர். எனவே, பணம் பட்டுவாடா, தேர்தல் செலவு ஆகியன குறித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவது மிகக் கடினம். இந்த உத்தரவுகளால், பயன் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மாணிக் தாகூர் , எம்.பி., காங்கிரஸ்
தேர்தல் செலவுகளுக்காக, வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கக் கூடாது. வங்கி மூலமே, பணம் அளிக்க வேண்டும் என, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது நல்ல துவக்கம். இதன் மூலம், தேர்தலில் பணத்தை வாரி இறைப்பது ஓரளவு கட்டுப்படுத்தப்படும். அரசியல் கட்சிகளுக்கு திரட்டும் நிதி, எப்படி வருகிறது. யார் யார் நன்கொடை அளிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதற்கான கணக்குகளை, நிதி கொடுப்பவரின் பெயரை குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் நன்கொடையை, ரொக்கமாக வழங்கக் கூடாது; வங்கி ஆவணங்கள் மூலம் அளிக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது, வேட்பாளர்களுக்கு, அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் போது, வங்கி மூலம் அளிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசியல் கட்சிகளின் வரவு - செலவுக்கு, கணக்கு உருவாக்கப்படுகிறது. ஆனால், இதை எப்படி செயல்படுத்த முடியும். அதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு ஊழியர்கள் உள்ளனரா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதைப் பார்க்கும் போது, ஒரு நல்ல அறிவிப்பை சீர்குலைக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. அரசியல் கட்சிகளின் நிதி செயல்பாடுகளை, தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இதன் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இதற்கு, அனைத்து கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்தே, அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது உறுதியாகிறது. ஒரு சட்டத்தை அமல் செய்யும்போது, பல தடைகள் இருக்கத் தான் செய்யும். அதையும் தாண்டி, அச்சட்டத்தை அமல் செய்யும்போது, மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும். இதற்கு, உறுதியான அரசு தேவை.

கிறிஷ்டினா சாமி, தமிழக அமைப்பாளர், "ஆம் ஆத்மி' கட்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X