கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Added : மார் 05, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலம் : மயிலம் பகுதியில் கேழ்வரகு சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மயிலம் பகுதியில் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால் ஏரி, குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் கிணறு, ஆழ் துளை கிணற்றில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
மயிலம், வீடூர், கணபதிப்பட்டு, ரெட்டணை, தீவனூர், கள்ளகொளத்தூர், செண்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் குறைந்த நீர் பாசனம் செய்யக்கூடிய கேழ்வரகு, எள், உளுந்து சாகுபடியை செய்ய துவங்கிவிட்டனர்.
விவசாயிகள் கேழ்வரகு விதைகளை தங்கள் நிலத்திலிருந்து தயார் செய்து கொள்கின்றனர். மார்கழி மாதத்தில் நெல் அறுவடை செய்தவுடன் கேழ்வரகு நாற்று விட்டு, புழுதி ஓட்டி, தொழுவுரம் அடித்து , பாத்திகள் தயார் செய்கின்றனர். நாற்று விட்ட 30ம் நாள் நடவு செய்கின்றனர். இந்த பட்டத்தில் நடும் கேழ்வரகு பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை.
நடவு செய்த 15ம் நாள் களை வெட்டிய பிறகு யூரியா தெளித்து விடுகின்றனர். பயிர் நன்றாக வளர்ந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், ஒரு ஏக்கர் கேழ்வரகு சாகுபடி செய்தால் 10 மூட்டை வரையில் விளைச்சல் கிடைக்கிறது.சர்க்கரை நோயாளிகள் உணவில் கேழ்வரகு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. வரும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட @கழ்வரகு உணவுகளை சாப்பிட்டால் உடலுக்குநல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X