Karunanidhi welcomes communists | கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி| Dinamalar

கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி

Added : மார் 07, 2014 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி

சென்னை : ''கூட்டணிக்கு இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து இடதுசாரி கட்சிகள் விலகியுள்ள நிலையில், தி.மு.க., தலைவர்கருணாநிதி, சென்னையில் நேற்றிரவுநிருபர்களிடம் கூறியதாவது:
கூட்டணிக்கு வரும்படி, இடதுசாரிகளுக்கு அழைப்பு விடக்கூடாது என்று ஒன்றுமில்லை. அழைப்பு விடுக்கப்பட்டு, இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

முன்னதாக, தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி ஒதுக்கீடு பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும்' என்று இடதுசாரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


மார்க்., கருத்து :

இந்நிலையில், கருணாநிதியின், அறிவிப்பை தொடர்ந்து, இந்திய கம்யூ., மார்க். கம்யூ., தலைவர்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்ற போது, அவர்களின் மொபைல் போன்கள் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. மார்க். கம்யூ., எம்.எல்.ஏ., பாலபாரதி கூறுகையில், இரு கட்சி தலைமையும், கருணாநிதியின் வரவேற்பை, மத்திய தலைமையிடம் கொண்டு சென்றபின், அவர்கள் எடுக்கும் முடிவை, நாங்கள் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
07-மார்-201406:03:58 IST Report Abuse
Vanavaasam கருணாநிதி அதிமுக வந்தாலும் ஏற்றுக்கொள்வார் ... வேண்டாம் என்று சொல்லமாட்டார் ..அப்படி ஒரு அதிசய பிறவி ...
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
07-மார்-201406:01:03 IST Report Abuse
அறிவா லயதாத்தா மத்த மாநிலங்களில் காங்கிரசையோ பாஜக வையோ எதிர்த்துக் கூட்டணி அமைக்கறாங்க. இங்கே என்னடானா திருட்டு திராவிடக் கட்சிகள்தான் ஒண்ண ஒண்ணு ஏத்துக்குது ? இவங்களுக்குள்ள என்ன கொள்கை வித்தியாசம்னு தெரியல. துட்டு பார்ப்பது மட்டுமே வெவ்வேறு வகை. மத்தபடி ரெண்டும் ஒன்னுதான்
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
07-மார்-201405:57:49 IST Report Abuse
அறிவா லயதாத்தா இன்னி தேதிக்கு கார்த்திக் வந்தாக்கூட ஒரு சீட் கொடுத்து சேத்துக்கற நிலைமை உங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X