Left calls off alliance with AIADMK | பரிதவிக்கவிட்ட ஜெயலலிதாக்கு பாடம் புகட்ட சபதம்: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்! - Jayalalitha | Dinamalar

பரிதவிக்கவிட்ட ஜெ.,க்கு பாடம் புகட்ட சபதம்: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்!

Added : மார் 07, 2014 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பரிதவிக்கவிட்ட ஜெ.,க்கு பாடம் புகட்ட சபதம்: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்!

அ.தி.மு.க.,வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, அ.தி.மு.க., 'கல்தா' கொடுத்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், பரஸ்பரம் ஆலோசித்தனர். தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டியது.


பிரிவோம்:

கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன், துணை செயலர், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், 'நண்பர்களாக சேர்ந்தோம், நண்பர்களாக பிரிவோம் என, மார்க்சிஸ்ட் கட்சியிடம், அ.தி.மு.க., கூறியுள்ளது. நம்மிடம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதிகளைப் பெற காத்திருப்போம்' என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு, பல நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கூட்டணி என்பது, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் அடங்கியது. இதில், யார் ஒருவருக்கு, 'சீட்' இல்லை என்றாலும், இடதுசாரிகள் அக்கூட்டணியில் நீடிக்க முடியாது. எனவே, 'அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாது' என்றனர்.

அந்த நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கியுள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வை தாக்கி பேசுகிறார். பா.ஜ.,வை பற்றி பேசவில்லை. எனவே, காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அணி என்ற கொள்கைக்கு எதிராக ஜெ., செயல்படுகிறார். தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, அவர், பா.ஜ.,வுடன் அணிசேர வாய்ப்புள்ளது. அதனால், அ.தி.மு.க., அணியில் தொடர முடியாது.


பதில் இல்லை:

பா.ஜ.,வை, ஜெயலலிதா விமர்சிக்கவில்லை என்ற கருத்தை, அவரின் கவனத்திற்கே, தா.பாண்டியன் எடுத்தும் சென்றிருக்கிறார். ஆனால், அதற்கு, ஜெ., எந்த பதிலும் அளிக்கவில்லை. தேர்தல் என்றால் வெற்றி பெறத்தான், அனைத்துக் கட்சிகளும் போட்டியிடுகின்றன; கூட்டணியும் அமைக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணி இல்லை எனில், அடுத்த கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும். தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது. 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுவது தேவையற்றது. பா.ஜ., பக்கம் அ.தி.மு.க., சாயும் நிலையில், அ.தி.மு.க.,வையும் சேர்த்து தோற்கடிக்க வேண்டும். இல்லையேல், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பது போலாகிவிடும். இவ்வாறு, நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதையெல்லாம் கேட்ட, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அடுத்து என்ன செய்யலாம் என, யோசனை சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த பெருவாரியான நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம். காங்கிரஸ், பா.ஜ.,வை சரி சம தூரத்தில், தி.மு.க., வைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தை, மதசார்ப்பற்ற அணி வெற்றிக்காக செய்ய வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.நிர்வாகிகளின் கோரிக்கையை, மாநில நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டதாகவும், இக்கோரிக்கையை, கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து அனுமதி பெறலாம் என, முடிவு செய்துள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தோற்கடிக்க...:

'2ஜி' வழக்கு நடைபெற்று வருகிறது. அதில், இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா மீதும் சொத்து குவிப்பு வழக்கு நடக்கிறது. எனவே, இப்போதைக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்வதே சரியாக இருக்கும். பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகளை தோற்கடிக்கவும், இக்கூட்டணி உதவும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இம்முடிவை, மார்க்சிஸ்ட் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சிகள் ஆதரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். விரைவில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவங்கும் என்றும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இணைந்து முடிவு செய்வோம்...:

''அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறிய நாங்கள், தேர்தலை சந்திக்க, இணைந்து முடிவெடுப்போம்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிட முடிவு செய்தோம். இதற்காக, பல கட்ட பேச்சுக்களை அக்கட்சியுடன் நடத்தினோம். ஆனால், அ.தி.மு.க.,வின் அணுகுமுறையால், உடன்பாடு ஏற்படவில்லை. 40 தொகுதிகளிலும், வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை, அ.தி.மு.க., துவங்கி விட்டது. எனவே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருங்கிணைந்து, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை, விரைவில் முடிவு செய்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
07-மார்-201406:26:43 IST Report Abuse
INTHIRAN கொள்கையாவது.....புண்ணாக்காவாது.....நீங்க ஜமாய்ங்க...தோழர்களே.....
Rate this:
Share this comment
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
07-மார்-201406:03:23 IST Report Abuse
Vanavaasam கருணாநிதி அதிமுக வந்தாலும் ஏற்றுக்கொள்வார் ... வேண்டாம் என்று சொல்லமாட்டார் ..அப்படி ஒரு அதிசய பிறவி ...
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
07-மார்-201406:03:17 IST Report Abuse
SURESH SUBBU தோழர்களுக்கு இப்போ ஒரு முக்கிய பொறுப்பு உள்ளது ... அது கட்டுமரத்தை மூணாவது அணிக்கு அழைப்பது.... கனிதான் பிரதமர் வேட்பாளர்... தா பாண்டியன் அறிக்கை வரும்.....மூணாவது அணி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ப்பு ...... திமுகாவில் இனைய அழகிரியுடன் தா பாண்டியன் பேச்சு வார்த்தை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X