DMDK to discuss with BJP over alliance | தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? விஜயகாந்திடம் பட்டியல் ஒப்படைத்தது பா.ஜ.,| Dinamalar

தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? விஜயகாந்திடம் பட்டியல் ஒப்படைத்தது பா.ஜ.,

Updated : மார் 11, 2014 | Added : மார் 10, 2014 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? விஜயகாந்திடம் பட்டியல் ஒப்படைத்தது பா.ஜ.,

தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் பட்டியலை இறுதி செய்து, நேற்று மாலை, பா.ஜ., நிர்வாகிகள், விஜயகாந்திடம் ஒப்படைத்துள்ளனர்.

பா.ஜ., கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துள்ள, விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சி, 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, கேட்டது. அதற்கு, பா.ஜ., தரப்பில், 14 தொகுதிகள் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், இரு கட்சிகளின் தரப்பிலும், தொகுதிகள் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், பா.ஜ., நிர்வாகிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை, தே.மு.தி.க., நடத்தி வருகிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை, 7ம் தேதி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையில், முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. மறுநாள், 8ம்தேதி, தியாகராய நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், பங்கேற்ற தே.மு.தி.க., நிர்வாகிகள், அக்கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை, பா.ஜ., நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

இதில், பா.ஜ., கூட்டணியில் உள்ள, பிற கட்சிகள் போட்டியிட விரும்பும் ஆறு தொகுதிகள் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. அதனால், மற்ற கூட்டணி கட்சிகளிடம் பேசிவிட்டு, தொகுதிகளை ஒதுக்குவதாக, பா.ஜ., நிர்வாகிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால், இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையும், முடிவு எட்டப்படாமல் முடிந்தது. இந்நிலையில், தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் பட்டியலை, பா.ஜ.,வினர் நேற்று இறுதி செய்தனர். அப்பட்டியல், தே.மு.தி.க., இளைஞரணி செயலர், சுதீஷ் மூலம், விஜயகாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.அந்தப் பட்டியலில், தே.மு.தி.க., கேட்ட தொகுதிகளில், நான்கு தொகுதிகள் இடம் பெறவில்லை என, கூறப்படுகிறது. அதற்கு மாறாக, தனித்தொகுதிகள் உட்பட, வேறு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில், விஜயகாந்திற்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. எனவே, இன்று, பா.ஜ., நிர்வாகிகளை அணுகி தொகுதி பட்டியலை மாற்றி பெற தே.மு.தி.க., தலைமை முடிவு செய்துள்ளது.இன்று தொகுதிப் பட்டியல் இறுதியானால், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
10-மார்-201406:14:28 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் காப்டன் கிட்டே சொல்லி தொகுதிகளை தமிழ் நாட்டுக்குள்ளேயே கேட்க சொல்லுங்கப்பா...அவர் பாட்டுக்கு மலேசிய, சிங்கப்பூர், தாய்லாந்து தொகுதிகளை கேட்கப் போகிறார்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
10-மார்-201405:49:07 IST Report Abuse
jagan ஜாக்கிரதை ...செந்தமிழ் கார்திக்க்னு ஒருத்தர் ( கொஞ்ச நாளா காணனும் ), துபாய்ல கேக்றான் அண்ட் மேக்ரான் கம்பனில வேல செயியிரவராம், லீவ்ல வந்திருக்கார்....கண்ட படி 'அடேய்' /'ஏன்டா' அப்பிடின்னு ஒருமையில் 'வீசும்/மணக்கும்' வகையில் கருத்து சொல்வார்... கோவபடாதீர் ....
Rate this:
Share this comment
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
10-மார்-201406:12:35 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் அவரெல்லாம் புது மாதிரி அரசியல் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவர்...அதுதான் அப்படி....புழுதியில் படுத்து , உருண்டு அரசியல் செய்வதால், புழுதி வாரி இறைக்கிறார்கள்.........
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மார்-201405:45:53 IST Report Abuse
villupuram jeevithan தொகுதி இருக்கட்டும் , கூட்டணி தலைமை யாருக்கு ? முடிவு பண்ணியாச்சா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X