ரயில்வேயில் ரூ.10 கோடி ஊழல்: 'மாஜி' உறவினர் மீது குற்றப்பதிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில்வேயில் ரூ.10 கோடி ஊழல்: 'மாஜி' உறவினர் மீது குற்றப்பதிவு

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: ரயில்வே வாரியத்தில், பதவி உயர்வு பெறுவதற்காக, 10 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில், 'மாஜி' ரயில்வே அமைச்சர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா உட்பட, பத்து பேர் மீது, சி.பி.ஐ., கோர்ட்டில், நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.


குற்றச்சாட்டு:

பவன்குமார் பன்சால், ரயில்வே அமைச்சராக, கடந்த ஆண்டு, இருந்த போது, அவரின் உறவினர் விஜய் சிங்லா, 10 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியை, பவன்குமார் பன்சால், ராஜினாமா செய்தார்; விஜய் சிங்லா உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய, விஜய் சிங்லா உட்பட, பத்து பேர் மீது, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில், ஆஜர்படுத்தப்பட்டனர்; அவர்கள், தங்கள் மீது, சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, ஆகஸ்ட், 25க்கு ஒத்தி வைக்கப்பட்டது.


பதவி விலகல்:

ரயில்வே அமைச்சர் பதவியில், 2012 அக்டோபரில் நியமிக்கப்பட்டு, 2013 மே மாதம் பதவி விலகிய, பன்சாலுக்கு பதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கர்நாடகாவின், மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டு, அப்பொறுப்பில் தொடர்கிறார். ரயில்வே துறையை, ஐந்து உறுப்பினர்களை கொண்ட, வாரியம் கட்டுப்படுத்துகிறது. ரயில்வே வாரியத்தின் தைவராக இருப்பவர், அருணேந்திரகுமார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X