'நாட்டாம! விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல்| Dinamalar

'நாட்டாம! விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல்

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, 'நமோ'வை தோற்கடிப்பதாக நினைத்து, தனக்கு தானே, ஆப்பு வைத்து கொண்டுள்ளது, காங்கிரஸ். அதை கண்டு பிடித்து விட்ட தொண்டர்கள், அதில் இருந்து மீள்வதற்கு, வழியும் சொல்லி உள்ளனர். 'நமோ' பிரசாரத்தை முறியடிக்க, பிரியங்கா தலைமையிலான, காங்., பிரசார குழு, தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.
* முதற்கட்டமாக, நாடு முழுவதற்குமான பிரசாரத்தை, தற்போது பிரியங்காவே கவனிக்கிறார். ராகுல் அமைத்த பிரசார குழுவில் உள்ள, மோகன் கோபால், ஜெய்ராம் ரமேஷ், மதுசூதன் மிஸ்திரி போன்ற மூத்த தலைவர்கள் கூட இனி, பிரியங்காவிடம் தான் பிரசாரம் பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.* இரண்டாவதாக, பெண்கள், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், பல்வேறு ஜாதியினரின் பிரச்னைகளை கையில் எடுத்து, பிரசாரம் செய்ய முடிவாகியுள்ளது. இதுவரை, தேர்தல்களில், பல்வேறு தொகுதிகளில், ஆங்காங்கே பொதுக் கூட்டம் போடுவது மட்டுமே, காங்கிரசின் வழக்கம். தற்போது அதை மாற்றி, தொகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில், சாலைகளில் கூட்டம் நடக்கும்; அதில், கட்சியின் கிராமப் பொறுப்பாளர் முதல், அமைச்சர் வரை கலந்து கொள்வர்.* மூன்றாவதாக, 'ஆன் -லைனில்' தவம் கிடக்கும் இளைஞர்களை கவர, 'கூகுள் ஹேங் அவுட்ஸ்' செயலி மூலம், சாம் பிட்ரோடா, களத்தில் ஈடுபட்டுள்ளார். 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மூழ்கி கிடப்போரின் ஓட்டுகளை அள்ளுவதற்கு, நந்தன் நிலேகணியுடன், அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபீந்தர் ஹூடா இணைந்து, தினசரி, 'அப்டேட்' செய்கிறார்.* நான்காவதாக, ராகுல் தன் பிரசார யுத்தியை மாற்றி அமைத்துள்ளார். செய்தித்தாள்கள் வினியோகிக்கும் ஏஜென்டுகள், வீடுகளில் வேலைபார்ப்போர், தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என, 48 வகையான அடித்தட்டு மக்களை சந்திக்கப் போகிறார். இதற்காக, கட்சி தொண்டர்கள், தொழிலாளர்களின் பட்டியலை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.* உச்சகட்டமாக, சமீபத்தில் வெளியான, காங்., விளம்பரங்களால், கட்சி மேலும் 'டேமேஜ்' ஆகி விட்டதாக, தொண்டர்கள் குமுறுகின்றனர். விளம்பரங்களை மாற்றும்படியும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதனால், ''கட்சி சாதனைகளோடு, எதிர்காலத்தில் செய்ய உள்ள சாதனைகளையும் விளம்பரங்களில் பட்டியலிடுவோம்,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.* பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட, பல்வேறு குழுக்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பெரிய தலைவலியாக நீடிக்கிறது. அதனால், டில்லியில் உள்ள தன் அலுவலகத்தில், பிரியங்கா அனைத்து குழுக்களையும் கூட்டி தினசரி ஆலோசித்து, தானே ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை