கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியா? ஓட்டம் பிடிக்கும் தே.மு.தி.க.,வினர்| Dinamalar

கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியா? ஓட்டம் பிடிக்கும் தே.மு.தி.க.,வினர்

Added : மார் 11, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில், தே.மு.தி.க.,வின், 'ஸ்டார்' வேட்பாளராக, விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ் போட்டியிட்டார். கட்சி துவங்கி, நான்கு ஆண்டுகளே ஆன நிலையில், கட்சியின் முக்கிய வேட்பாளரான, சுதீஷ் தங்கள் பகுதியில் நிறுத்தப்பட்டதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னரே, கள்ளக்குறிச்சியில் முகாமிட்ட, கட்சியின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, 'தேர்தல் செலவுக்கு, கட்சித் தலைமை பணம் தரும். அதுவரை, உங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு பணிகளைத் துவக்குங்கள். யார் சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அவருக்கு, விஜயகாந்தின் பாராட்டு நிச்சயம்' என, கிடைக்கும் என்று உசுப்பேத்தினர். இதை நம்பி, நிர்வாகிகள் பலரும் நேரடியாக களமிறங்கி, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர், தே.மு.தி.க.,வில் இருந்தபோதும், ஆர்வம் மிகுதியால், கடன் வாங்கி, தேர்தலில் செலவு செய்தனர். தலைமையில் இருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்த, நிர்வாகிகளுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. கூட்டணி பலம் இன்றி, தே.மு.தி.க., தனித்து தேர்தலைச் சந்தித்ததால், சுதீஷுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. தேர்தல் முடிந்ததும், கட்சி நிர்வாகிகளை அழைத்து தட்டிக்கொடுத்த சுதீஷ், கள்ளக்குறிச்சி கூடாரத்தைக் காலிசெய்து விட்டு கிளம்பிச் சென்றார். இதனால், பணம் செலவழித்த பலரும், தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து, இன்னும் மீளமுடியாத சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், மீண்டும் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவார் என, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது, கள்ளக்குறிச்சி பகுதி, கட்சி நிர்வாகிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமின்றி தவிக்கும் பல நிர்வாகிகள், தேர்தல் ஆலோசனை கூட்டம் என்றாலே, ஓட்டம் பிடிக்கும் நிலையே உள்ளது. இதன்பின், 2011ல், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் களம் இறங்கினார். தலைவரே போட்டியிடுவதால், வேறு வழியின்றி கட்சி நிர்வாகிகள், மேலும் கடன் வாங்கி தேர்தல் பணியாற்றினர். இதே கூட்டணி பலத்துடன், உள்ளாட்சி தேர்தலில் பதவிகளை பிடித்து செட்டிலாகி விடலாம் என்று நினைத்திருந்த, கட்சி நிர்வாகிகளின் கனவு, விஜயகாந்த் வெற்றிபெற்ற கையோடு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தகர்ந்தது. இந்த முறை, கட்சி மேலிடம் பணம் கொடுத்தால் மட்டுமே, கட்சியின் எந்த வேட்பாளருக்கும், தேர்தல் பணியாற்றுவது என, முடிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X