எதிரிகளை ஒழிக்க பில்லி சூனிய தாக்குதல்: மந்திரவாதிகளை நாடும் அரசியல்வாதிகள்| Dinamalar

எதிரிகளை ஒழிக்க பில்லி சூனிய தாக்குதல்: மந்திரவாதிகளை நாடும் அரசியல்வாதிகள்

Added : மார் 12, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எதிரிகளை ஒழிக்க பில்லி சூனிய தாக்குதல்: மந்திரவாதிகளை நாடும் அரசியல்வாதிகள்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர், சந்திரசேகர்,35. தமிழக வாழ்வுரிமை கட்சியின், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலரான இவர், ஒரு மாதத்திற்கு முன், கட்சி தலைவர் வேல்முருகனை அழைத்து வந்து, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினார். 60 அடி உயர கொடிக்கம்பத்தையும் அமைத்துள்ளார். இது, அப்பகுதி பா.ம.க., வினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது; இதுதொடர்பாக, அவ்வப்போது, மோதல்களும் நிகழ்ந்தன.

இந்நிலையில், 15 நாட் களுக்கு முன், இரவு 10:00 மணிக்கு, சந்திரசேகர் வீட்டிற்குள், எலுமிச்சை பழத்துடன் சில உலோகத் தகடுகள் வீசப்பட்டன. பெண் ஒருவர் இவற்றை வீசிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு ஓயாத நிலையில், கடந்த வாரம், சந்திரசேகர் வீட்டிற்குள், மீண்டும் எலுமிச்சை பழம் மற்றும் உலோகத் தகடு வீச்சு நடந்தது. வீசியவரை மடக்கி விசாரித்தனர். அவர் பெயர் துளசி. பா.ம.க.,வைச் சேர்ந்தவர் என, கூறப்படுகிறது. பா.ம.க., உளளூர் பிரமுகர்கள் யோசனைப்படி, அவற்றை வீசியதாக தெரிவித்துள்ளார். அவர் மீது, தாக்குதல் நடத்தியதாக, ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. சந்திரசேகரும், அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, சந்திரசேகர் கூறியதாவது: பா.ம.க.,வினர் அவ்வப்போது, இடையூறு ஏற்படுத்தி வந்தனர். அந்த பெண், வீட்டிற்குள் எலுமிச்சை பழம், தகடுகளை வீசிச் சென்ற பின், வீட்டில் இருந்தோர் பயந்து விட்டனர். அதன்பின், பில்லி சூனியம் வைத்திருப்பதை எடுக்க வேண்டும் என, சிலரை அழைத்து வந்து, வீட்டில் பூஜை செய்தேன். அவர்கள், வீட்டினுள், புதைத்து வைக்கப்பட்டு இருந்த, சில தகடுகளை எடுத்தனர். அதில், என் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதற்காக, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்டேன். நான் கொடுத்த புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் அல்ல, தமிழகத்தில் பல இடங்களிலும், அரசியல் எதிரிகளை ஒழிக்க, பில்லிசூனியம் வைப்பது தொடர்கிறது. பீதியால் நடுங்கும் பிரமுகர்கள், பில்லி சூன்யத்தை அழிக்க, மந்திரவாதிகளை தேடி அலைகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X