தொகுதி நிலவரம்: சேலம் | Dinamalar

தொகுதி நிலவரம்: சேலம்

Added : மார் 12, 2014
Advertisement


பிரச்னைகள், எதிர்பார்ப்பு


* சேலம் மாவட்டத்தை பிரித்து, மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்பது, அதிகாரிகளின் பதிலாக உள்ளது


* மேட்டூர் அணை இருந்த போதும், தொகுதி முழுவதும் காவிரி குடிநீர் கிடைக்கும் வகையில் ஏதும் திட்டமிடப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது


* சேலத்தில், லாரி மார்க்கெட்டுக்கு தனியாக ஒரு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை, நீண்ட நாட்களாக உள்ளது. சேலம் மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது


* முள்ளுவாடி கேட், அணைமேடு, லீ பஜார் உள்ளிட்ட பகுதிகளில், ரயில்வே மேம்பாலம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என, அவ்வப்போது பதில் கிடைத்தாலும், இன்னமும், அதற்கான, திட்ட அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை


* சேலம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் முழுமையடையாமல் உள்ளது. ஆத்தூர் தனி குடிநீர் திட்டப்பணி, நான்கு ஆண்டாகியும் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்


* மலர் பயிரிடுவது அதிகம் உள்ள, பனமரத்துப்பட்டி பகுதியில், 'சென்ட்' ஆலை அமைக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் ஆசை, நிறைவேற்றப்படாமலே உள்ளது. இது, தேர்தல் வாக்குறுதிகளில் மட்டும் நிச்சயம் இடம் பெறுகிறது


* சேலம் எம்.பி., தொகுதியில், மக்களின் அடிப்படை தேவைக்காக, பெரிய அளவிலான திட்டங்களை நிறைவேற்றவில்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்


* எம்.பி., செம்மலையின் சாதனை, அரசு விழாக்களில் தவறாமல் பங்கேற்றது மட்டும்தான்


* இங்கு, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், சொல்லிக்கொள்ளும் அளவில், மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள அதிருப்தி, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கலாம்

எம்.பி., பேட்டி

* ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?


சேலம் தொகுதியில், என்னை தெரியாத மக்கள், யாரும் கிடையாது. நீங்கள் தான், தொகுதி பக்கம் எம்.பி., வருவதில்லை என்கிறீர்கள். பார்லிமென்ட் இல்லையென்றால், அரசு விழாக்களில் தவறாமல் பங்கேற்பேன்.

* தொகுதி குறித்து, பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்?


ஆத்தூர் தனி குடிநீர் திட்டத்துக்கு, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பைப்லைன் போடுவதற்கு, மத்திய அரசிடம் வலியுறுத்தி சிறப்பு அனுமதி பெற்று கொடுத்தேன். சேலம் மாநகரில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு வலியுறுத்தினேன். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, இதய ஆபரேஷனுக்காக, நிதி உதவி பெற்று கொடுத்துள்ளேன். போடிநாயக்கன்பட்டியில் சுரங்கப்பாலம் அமைக்க முயற்சி எடுத்துள்ளேன்.

* மத்திய அரசு நிதி மூலமாக உங்கள் தொகுதிக்கு செய்த பணிகள்?


சேலம் மாநகராட்சி, அனைத்து வார்டுகளிலும், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தார்சாலை, சிமென்ட் சாலை, பள்ளிக்கட்டடம், தெருவிளக்கு போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். புதிய திட்டங்களுக்காக, மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தி உள்ளேன்.

* எத்தனை முறை பார்லிமென்டில் பங்கேற்றுள்ளீர்கள்?


மொத்தம் உள்ள, 543 உறுப்பினர்களில்; பார்லிமென்டில் தவறாமல் பங்கேற்ற உறுப்பினர்களில், நான், மூன்றாமிடத்தில் உள்ளேன். அ.தி.மு.க., பார்லிமென்ட் துணை தலைவர் என்ற அடிப்படையில், தமிழக மக்கள் நலனுக்காக குரல் கொடுத்துள்ளேன்.

* உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு...


முதல்வரின் சாதனைக்கான வெற்றி, நிச்சயம் தொகுதியிலும் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X