Balabharathi interview to Dinamalar | தேர்தல் போரில் எதிரிகளை வீழ்த்துவதே முதல் வேலை': பொங்குகிறார் பாலபாரதி| Dinamalar

தேர்தல் போரில் எதிரிகளை வீழ்த்துவதே முதல் வேலை': பொங்குகிறார் பாலபாரதி

Added : மார் 12, 2014 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேர்தல் போரில் எதிரிகளை வீழ்த்துவதே முதல் வேலை': பொங்குகிறார் பாலபாரதி

கூட்டணி அமைத்து போட்டியிடலாம், அதற்கான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய பேசலாம் என, குழுக்கள் அமைத்து, அ.தி.மு.க.,வும், இடதுசாரிகளும் பல கட்ட சந்திப்புகளை நடத்திய நிலையில், கூட்டணியிலிருந்து, இடதுசாரிகளை அ.தி.மு.க., வெளியேற்றியது. இதனால், தமிழகத்தில் தனித்துப் போட்டி என்ற முடிவை இடதுசாரிகள் எடுத்துள்ளனர்.
திராவிட கட்சிகளுக்கு இணையாக, கம்யூனிஸ்ட்களால் போட்டியை உருவாக்க முடியுமா? இல்லை, பத்தோடு, பதின்னொன்றாக மட்டுமே களத்தில் நிற்பார்களா என்கிற சந்தேகத்துக்குரிய கேள்விகள், இடதுசாரிகளை நோக்கி எழுப்பப்படும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வும், மாநில குழு உறுப்பினருமான பாலபாரதி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
* வெண்மணி மணி மண்டபம் திறப்பு விழாவில் கூடிய கூட்டத்தைப் பார்த்துத்தான், தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளீர்களா?வெண்மணி மணி மண்டபம் திறப்பு விழா, பல மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. கட்சியின் பொது செயலரின் தேதியைப் பெற்று, விழா முடிவு செய்யப்பட்டது. அப்போது, நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். அதனால், வெண்மணி மணி மண்டப திறப்பு விழாவுக்கும், தனித்துப் போட்டியிடும் முடிவுக்கும் தொடர்பில்லை. அப்படி இணைத்துப் பார்த்தால், அது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கம் முடிச்சுப்போடும் செயல். தேர்தலுக்கு முன், ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்தி, தேர்தல் நிலைப்பாட்டை சொல்கின்றன. அதுபோன்ற, நிகழ்வை கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்தியிருக்க வேண்டும் என்பது, என் கருத்து.
* அ.தி.மு.க., வெளியேற்றிய பின், தனித்துப் போட்டியிடும் முடிவு சரியானதா?பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின் படி தான், அ.தி.மு.க.,வுடன் களமிறங்க முடிவு செய்தோம். ஆனால், எங்களை அவர்கள் வெளியேற்றியதற்கு, என்ன காரணம் என்பதை, அ.தி.மு.க., தான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்பதற்காக, பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றைக்கும் மாற முடியாது. எங்களது கொள்கையை முன்வைத்து, தொடர்ந்து களமாட, தனித்து நிற்கிறோம்.
* உங்களுடைய கொள்கைக்கு தி.மு.க., உதவாது என்பதால், அக்கட்சி அழைத்தும், கூட்டணியை ஏற்கவில்லையா?தேர்தலுக்கு சில மாதங்கள் வரை, காங்கிரஸ் தலைமையிலான அரசில் தி.மு.க., அங்கம்வகித்து இருந்தது. காங்கிரஸ் நிறைவேற்றிய அனைத்து மக்கள் விரோத மசோதாக்களையும், தி.மு.க., ஆதரித்துள்ளது. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்பதற்காக, தி.மு.க., கூட்டணிக்கு செல்ல முடியாத சூழல்.
* தனித்துப் போட்டியிட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கம்யூனிஸ்ட் வலுவுள்ளதா?கடைசி நேரத்தில், அ.தி.மு.க., இப்படி செய்துவிட்டதே என, அக்கட்சி மீது மக்களுக்கு கோபம் உள்ளது. அதற்கு, அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிப்போம். பா.ஜ., - காங்கிரஸ் கொள்கைகள், நாட்டிற்கு ஆபத்து என, மாற்றுக் கொள்கையை முன் வைக்கிறோம். அதற்கு, மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என, கேட்கிறோம். தேர்தல், வெற்றி, தோல்விகள் கம்யூனிஸ்ட் கட்சியை எப்போதும் பாதித்ததில்லை.
* அ.தி.மு.க.,- தி.மு.க.,வை சமமாக பார்க்கறீர்களா?போர்க்களத்தில் எதிரிகள் அனைவரையும் நோக்கியே வாள் பாயும். இந்த எதிரியை இப்போது வீழ்த்தலாம். மற்றொரு எதிரியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என, யாரும் முடிவு செய்வதில்லை.
* களத்தில் உள்ள எதிரிகள் அளவுக்கு உங்களிடம் பலம் உள்ளதா?கம்யூனிஸ்ட் பலவீனமான கட்சியாக எண்ண வேண்டாம். ஆனால், பணத்துக்கும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கும் மயங்காமல், மக்களின் பிரச்னைகளைப் போக்கும் கட்சியாக, எங்களை மக்கள் பார்க்க வேண்டும்.தமிழகத்தில் நாங்கள் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், அதன் குரல் மக்கள் பிரச்னைக்காக எப்போது ஒலித்துக் கொண்டிருக்கும்.
பாலபாரதி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
12-மார்-201417:03:54 IST Report Abuse
Chenduraan மக்களை முன்னேற விட்டு விடுவோமா நாங்க என்ன சும்மாவா... ஒரு நல்ல யோசனை.. உங்க கட்சியை AAP உடன் இணைத்தால் என்ன? AAP யில் படித்தவர்கள் அதிகம். அதனை உங்க பாச்சா எடுபடாது. அதுக்காகவா கூட்டு சேரல?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
12-மார்-201410:47:58 IST Report Abuse
mirudan அம்மாவுக்கு எதிரிகள் அதிகம் ஆகி கொண்டே போகிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
அம்பை சுதர்சனன் - Cumbum ,இந்தியா
12-மார்-201407:45:51 IST Report Abuse
அம்பை சுதர்சனன் உண்மையான தொண்டர்களை உடைய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் அழிவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X