Karunanidhi and Jayalalitha fear: Vijayakanth | தே.மு.தி.க., கூட்டணியால் கருணாநிதி, ஜெயலலிதாக்கு பயம்: விஜயகாந்த் பேச்சு - Jayalalitha | Dinamalar

தே.மு.தி.க., கூட்டணியால் கருணாநிதி, ஜெ.,க்கு பயம்: விஜயகாந்த் பேச்சு

Updated : மார் 14, 2014 | Added : மார் 13, 2014 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தே.மு.தி.க., கூட்டணியால் கருணாநிதி,  ஜெ.,க்கு பயம்:  விஜயகாந்த் பேச்சு

''பா.ஜ., தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் பயம் வந்து விட்டது. அதனால், மாற்றி, மாற்றி பேசுகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நாளை தேர்தல் பிரசாரம் துவக்குகிறார். விஜயகாந்த் பிரசாரத்திற்கு வரும்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர், விஜயகாந்த் பேசியதாவது: பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும் பயம் வந்துவிட்டது. ஜெயலலிதா பிரசாரத்தை துவக்கும் முன்வரை, பிரதமர் கோஷத்தை எழுப்பி வந்தார். ஆனால், முதல் நாள் பிரசாரத்திலேயே, 'அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும்' என்றார். இப்போது, அ.தி.மு.க., கைகாட்டுபவரே பிரதமராக அமர முடியும் என்கிறார். அதேபோல, கருணாநிதி, 'மோடி என் நண்பர் என்றும், அவர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றுகிறார்' என்றும் கூறினார். இப்போது, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிறார். அவரது கூட்டணியிலேயே, இரண்டு மதவாதகட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை மறந்துவிட்டு பேசுகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சேர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும், நாம் பாடுபடவேண்டும். ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பா.ஜ., கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது. நம் கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இணைந்து தீவிரமாக பணியாற்றுகின்றனர்; அவர்களின் முயற்சி பலிக்காது. இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
14-மார்-201401:42:08 IST Report Abuse
Vivek Palaniappan கருணாநிதி, ஜெ.,க்கு பயம் உண்மைதான் - விஜயகாந்த் டெபாசிட் வாங்கிடுவர்னு பயம்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
13-மார்-201413:03:31 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///, 'அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும்' என்றார். இப்போது, அ.தி.மு.க., கைகாட்டுபவரே பிரதமராக அமர முடியும் என்கிறார். ///உண்மை என்னவென்றால், நாளையே வி காந்த் தப்பித்தவறி 4 ஐந்தோ வெற்றி பெற்றுவிட்டால் கூட ஜெயா 5 மேலே வென்றால் மோடிக்கு காந்தைவிட ஜெயாவின் ஆதரவையே நாடுவார், அதற்கு தரகர் " சோ" அவர்கள் அயராது பாடுபடுவார், அப்போ நம்ம வ காண்டு மூஞ்சியை எங்கே வைத்துகொள்வார்...இப்போ ஜெயா தன்னுடைய கூட்டணியிலிருந்து கலட்டிவிடபட்ட பிறகு போனதை விட இன்னும் அஷ்டகோனலாகும் இன்னும் நிறைய புல் பாட்டில் தேவைப்படும்... அப்போதும் சுதீசும் பிரேமாவும் தான் கூட்டணியில் இருப்பார்கள் கம்பனி கொடுப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel
nikibala - tirupur,இந்தியா
13-மார்-201412:54:11 IST Report Abuse
nikibala கேப்டன் நீங்க உண்மையா கட்சி நடத்துரீங்கலா இல்ல காமெடி படம் எடுகிரின்களா முன்னாடி தேர்தல் வந்தா நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் காமெடி பண்ணுவார். இப்போ எப்போதும் கேப்டன் கேப்டன் தான் சரக்கு அடிச்சாலும் சரி காமெடி பண்ணலும் சரி கப்டன் மறக்காதிங்க பாகிஸ்தான்ல இடை தேர்தல் வருது சீக்கிரம் வேட்பாளரை அருவிசுருங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X