Comment about Jayalalithaa's rule: Stalin | ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யுங்க! ஸ்டாலின் பேச்சு: | Dinamalar

ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யுங்க! ஸ்டாலின் பேச்சு:

Updated : மார் 13, 2014 | Added : மார் 13, 2014 | கருத்துகள் (94)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி விமர்சனம் செய்யுங்க!  ஸ்டாலின் பேச்சு:

சென்னை : கம்ப்யூட்டரை பயன்படுத்தி, தகுந்த ஆதாரங்களுடன், 'அம்மா'வின், சும்மா ஆட்சியைப் பற்றி, இணையதளம் மூலம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க.,வின் இணையதள தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன். முதலில், நாம் தேர்தல் களத்தில் இறங்கும் போது, 10 முதல், 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நிலை இருந்தது. இப்போது, 20 இடத்திற்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நிலை உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, போலீஸ் மற்றும் உளவுத்துறையினர், 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது; 50/50 என்ற நிலை உள்ளது' என, கூறி வருகின்றனர்.

பொதுவாக, ஆளும்கட்சிக்கு சாதகமாக, 5,000 பேர் கூடினால், 50 ஆயிரம் என்று கூறுவர். எதிர்கட்சிக்கு, 50 ஆயிரம் பேர் கூடினால், 5,000 பேர் என்பர். இதுதான் போலீஸ்துறையின் வேலை. இப்போது, போலீஸ்துறையே, 50/50 என்று சொன்னால், உண்மையில் என்ன நிலை என்பது, உங்களுக்கு புரிந்திருக்கும்.அறிவியலால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கொடை இணையதளம். அதை நாம் முழுமையாக பயன்படுத்தி, தி.மு.க.,வுக்கு எதிராக பரப்பப்படும், அவதூறு பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும். அந்தப் பணியில், உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது, மேலும் வளர வேண்டும். தி.மு.க., வின் மீது அக்கறை கொண்டவர்களிடம், 'சாப்ட்வேராகவும்', அவதூறு பரப்புவோரிடம், 'ஹார்டுவேராகவும்' செயல்பட வேண்டும். அதேநேரத்தில், கண்ணியமாக பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vandu murugan - Tuticorin,இந்தியா
14-மார்-201400:20:23 IST Report Abuse
vandu murugan பார்பன வலையில் விழாதீர்கள் - வண்டு முருகன்
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
13-மார்-201417:28:28 IST Report Abuse
dinesh அதுக்கு நீங்க 2G ல அடிச்ச காச புள்ளா இந்த தேர்தல்ல கொட்டணும். செய்வீங்களா?
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-மார்-201404:15:12 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஅடிச்ச காசு பத்தி கேட்டா, உடனே உங்களுக்கு எவ்ளோ டிஸ் லைக் பாத்தீங்களா, திமுகவினர் என்றால் திமுகவினர் தான், எங்கே போனாலும் அவர்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்தினர் தான் ....
Rate this:
Share this comment
Cancel
T.g. Balasubramanian - Bishan New Town,இந்தியா
13-மார்-201417:19:53 IST Report Abuse
T.g. Balasubramanian அம்மாவைப் பற்றி எழுதுவது மட்டுமல்ல, உங்கள் கட்சியினரின் 2ஜி, தொலைபேசி ஊழல்களைப் பற்றியும் எழுதலாமல்லவா. அம்மா தண்ணீர், உணவகம் போன்றவை பொதுமக்களின் அன்றாடத் தேவையை பெரும்பாலான தமிழர்களுக்கு பூர்த்தி செய்கிறது. தண்ணீரும் உணவும் மனிதர்களின் அடிப்படை தேவைகள். சாலைகளும் பூங்காக்களும் உயர் தட்டு மக்களின் தேவைகளுக்கும் பொழுது போகாதவர்களுக்கும் உதவுவது. எது தேவை? உயிரா? பொழுதுபோக்கா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X