குளியலறை, ஓய்வறை வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாராகும் பிரசார வேன்கள்!| Dinamalar

குளியலறை, ஓய்வறை வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாராகும் பிரசார வேன்கள்!

Added : மார் 13, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குளியலறை, ஓய்வறை வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாராகும் பிரசார வேன்கள்!

அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., தலைவர்களுக்கான, தேர்தல் பிரசார வாகனங்கள், அதிநவீன வசதிகளுடன் கோவை, சிவானந்தா காலனியிலுள்ள, தனியார் நிறுவனத்தில் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து, அந்நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: முக்கிய கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், தங்களுக்கான பிரசார வாகனங்களை, அதிநவீன முறையில் வடிவமைத்து தர கோரியுள்ளனர். அதன்படி, சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கட்சி பிரமுகர்களின் விருப்பம், பொருளாதார வசதிக்கு ஏற்ப, வாகனங்களை வடிவமைக்கிறோம். முதல்வர் ஜெயலலிதாவுக்கான பிரசார வாகனத்தில், நவீன ஹைட்ராலிக் கிரேன், படுக்கை வசதி, கழிவறை, குளியல் அறை, வாஷ் பேசின் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பிரத்யேகமாக, 'ரெஸ்ட் ரூம்' வாகனம் ஒன்றும், பின்தொடர்ந்து செல்ல, தயாராகி வருகிறது. இதேபோன்று, மேலும் சில கட்சி பிரமுகருக்கும் இங்கிருந்துதான் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. நவீன இருக்கைகள், மின் விளக்குகள், ஸ்டிக்கரிங் உள்ளிட்ட வடிவமைப்புகளை செய்து தருகிறோம். கடந்த ஆண்டு, 25க்கும் மேற்பட்ட வாகனங்களை வழங்கினோம். இந்தாண்டு, 10 வாகனங்களுக்கு மட்டுமே, 'ஆர்டர்' வந்துள்ளது. வசதிகளுக்கேற்ப செலவுத்தொகையும் அதிகரிக்கும். வாகனத்தின் நிறம், அமைப்பு உள்ளிட்டவற்றை பொறுத்து போக்குவரத்து அலுவலர்களால் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு, ஊழியர்கள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankaranarayanan - Connecticut,யூ.எஸ்.ஏ
14-மார்-201400:03:32 IST Report Abuse
Sankaranarayanan இன்பச்சுற்றுலா செல்ல நேரம் வந்தாச்சு
Rate this:
Share this comment
Cancel
Addy - Singapore,சிங்கப்பூர்
13-மார்-201405:30:35 IST Report Abuse
Addy இன்னும் கொஞ்சம் விட்டா மக்கள் வரி பணத்தில் சட்டமன்றத்தையே caravanla கொண்டுவந்துடுவாங்க
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
13-மார்-201405:10:26 IST Report Abuse
naagai jagathratchagan குளியலறை, ஓய்வறை வசதிகளுடன்....எல்லாம் சரிதான் ..நம்ம ஊர் கிடு கிடு சாலை வசதிக்கு ஏற்ப தயார் பண்ணி இருப்பீங்க .. அதெல்லாம் தெரியுது .பண மூட்டை பாது காப்பா வைக்க அதில இடமுண்டா ...அதை சொல்லவே இல்லியே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X