காசு கொடுக்காமல் பிரசாரமா? கொதிக்கும் நடிகர், நடிகையர்| Dinamalar

காசு கொடுக்காமல் பிரசாரமா? கொதிக்கும் நடிகர், நடிகையர்

Added : மார் 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்திற்கு, நடிகர், நடிகையர் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் என, நட்சத்திர பேச்சாளர்கள், 31 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வார்கள் என, அ.தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது. இவர்களில், 15க்கும் மேற்பட்டவர்கள், நேற்று மாலை வரை தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படவில்லை. தாமதத்திற்கு காரணம் என்ன என, விசாரித்தபோது, நட்சத்திர பேச்சாளர்கள் பலர் புலம்பினர்.
அவர்கள் கூறியதாவது: நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் வசதியானவர்கள் இல்லை. பலர் அன்றாட செலவிற்கே சிரமப்படுகின்றனர். இப்பேச்சாளர்களுக்கு, தேர்தல் வரும்போது தான், ஏதாவது பணம் கிடைக்கும். தலைமை கழகத்தால், பிரசாரத்திற்கு அனுப்பப்படுவோருக்கு, முதற்கட்ட செலவிற்கு, குறிப்பிட்ட பணம் கொடுக்கப்படும். அத்துடன், மாவட்ட செயலர்கள், வேட்பாளர்கள் மூலமும் சன்மானம் வழங்கப்படும். கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் பிரசாரத்திற்கு புறப்படும் முன்னரே, கட்சி மேலிடம், எங்களின் செலவுக்கு கணிசமான பணத்தை வழங்கியது. அதனால், நாங்கள் யார் கையையும் எதிர்பார்க்காமல், கட்சி கொடுத்த பணத்தை செலவு செய்து, தீவிர பிரசாரம் செய்தோம். ஆனால், லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ள எங்களுக்கு, முதல் கட்ட செலவிற்கு, கட்சியின் கொள்கை பரப்பு செயலர் மூலம், தேவையான பணம் வழங்கப்படவில்லை. அதனால், எப்படி பிரசாரத்திற்கு செல்வது என, யோசித்து வருகிறோம். சட்டசபை தேர்தல் என்றால், பிரசாரத்தின் போது, வேட்பாளர்களை சந்திக்க வாய்ப்பிருக்கும். எம்.பி., தேர்தலில், வேட்பாளரை சந்திப்பது சிரமம். எனவே, வேட்பாளர் மூலம் பணம் எதுவும் கிடைக்காது. தலைமை கழகம், பணம் வழங்கினால் தான் உதவியாக இருக்கும். நாற்பது நாட்களுக்கு மேல், தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. வீட்டை விட்டு செல்லும் பேச்சாளர்கள், வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போது தான், பணப்பிரச்னையின்றி, நல்ல படியாக பிரசாரத்தில் ஈடுபட முடியும். பணம் இல்லாமல், நாங்கள் எப்படி வீட்டை விட்டு கிளம்புவது. கட்சி மேலிடம் இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது. இவ்வாறு, பேச்சாளர்கள் புலம்பினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X