அழகிரியிடம் ஆதரவு கேட்பேன்: தி.மு.க., வேட்பாளர் பேட்டி| Dinamalar

அழகிரியிடம் ஆதரவு கேட்பேன்: தி.மு.க., வேட்பாளர் பேட்டி

Added : மார் 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: "முன்னாள் மத்தியமைச்சர் அழகிரியிடம், ஆதரவு கேட்பேன்," என, மதுரை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.
மதுரையில் பிரசாரத்தை துவக்கிய பின் அவர் கூறியதாவது: 1996-2001 வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். 1989ல் எம்.பி.,க்கு போட்டியிட்டேன். மதுரை தொகுதிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை அறிவேன். பாலங்கள், ஐகோர்ட் கிளை, செல்லூர் பாலம், வணிக வளாகம், சென்ட்ரல் மார்க்கெட், பூ மார்க்கெட், வக்கீல் சங்கக் கட்டடம் என பல திட்டங்கள் தி.மு.க., ஆட்சியில் நடந்தவை. மாநிலத்தில் 2வது பெரிய நகரான மதுரை பின்தங்கியுள்ளது. முழு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். பொருளாளர் ஸ்டாலின் உட்பட கூட்டணி தலைவர்கள் மதுரையில் பிரசாரம் செய்கின்றனர். ஐந்து வண்டிகளில் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தோம். போலீசார் எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கின்றனர். அ.தி.மு.க.,வினர், கல்யாண மண்டபங்களில் தொண்டர்களுக்கு தினமும் கறி விருந்து கொடுக்கின்றனர். அவர்களை கண்டுகொள்வதில்லை. தேர்தல் கமிஷனில் புகார் செய்வோம். நெருக்கடிகள் இருந்தாலும் வெற்றியே இலக்கு. அழகிரியிடம் ஆதரவு கேட்போம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X