மக்கள் குரல்| Dinamalar

மக்கள் குரல்

Added : மார் 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மக்கள் குரல்

காங்கிரஸ் தமிழகத்தில் செல்லாக் காசாகி விட்டது. அந்த கட்சியில் சேரும் எல்லோரும், தங்களை தலைவர்களாக நினைப்பதால், கட்சி அழிந்து வருகிறது. அதனால் தான், காங்கிரசை தங்களுடன் சேர்க்க, மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
மகேந்திரன், சைதாப்பேட்டை, சென்னை.
தேர்தலில் நிற்கும்போது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என, அடுக்கடுக்கான வாக்குறுதி தந்து, ஓட்டுக்களை பெற்று விடுகின்றனர். ஜெயித்தால் எங்களை கண்டுகொள்வதே இல்லை. அந்த நிலை இனிவரும் ஆட்சியாளர்கள் மூலமாவது மாற வேண்டும்.
மாரியப்பன், மாற்றுத்திறனாளி, ஆலந்தூர், சென்னை.
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா என்பது குறித்து, இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.,வை விட, காங்., கட்சி வலுவானதாக இருப்பதாகவே தோன்றுகிறது. மோடி அலை என்பது ஒரு மாயை. அதனால், இந்த தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
அக்பர் அலி, ஆர்.ஏ.புரம், சென்னை
ராஜிவின் வாரிசு என்பதை விட, ராகுலுக்கு பெரிய தகுதி என்ன இருக்கிறது? பிரதமராக முழுத் தகுதியும் படைத்தவர் மோடி மட்டும் தான். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, மோடியால் மட்டுமே முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கணேஷ்குமார், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X