மம்தா, ஜெயா தொலைபேசி நட்பின் சூட்சுமம் என்ன?| Dinamalar

மம்தா, ஜெயா தொலைபேசி நட்பின் சூட்சுமம் என்ன?

Added : மார் 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா-விற்கு ஆதரவு தெரிவித்தார் என்ற, செய்தி சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து ஜெயலலிதா, மம்தாவிடம் தொலைபேசியில் உரையாடியதும் பரபரப்பான செய்தியானது. இந்த இரண்டு செய்திகளும், கிளப்பிவிட்ட ஹேஷ்யங்களுக்கும், தேர்தல் கணக்குகளுக்கும் முடிவே இல்லாமல் போய்விட்டது. இதை, ஒவ்வொரு அங்கமாக பிரித்துப் பார்த்தால் தான், ஹேஷ்யங்களுக்கு முடிவுகட்ட முடியும்.

* மம்தா ஆதரவு தெரிவித்தாரா?
ஜெயலலிதாவை, மம்தா, பிரதமர் பதவிக்கு ஆதரிப்பதாக செய்தி தலைப்புகள் தெரிவித்தாலும்; 'முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார், மாயாவதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டால், லோக் சபா தேர்தலுக்கு பின், அவர்களில் யாரையேனும் ஆதரிப்பது குறித்தும் தான் பரிசீலிப்பேன்' என்று, பொருள்படுவது போலவே மம்தா பேசியிருக்கிறார்.

* பின்பு, ஜெயலலிதா ஏன் நன்றி தெரிவித்தார்?
இடதுசாரிகளுக்கு எதிரியான மம்தாவுடன் நட்புறவு கொண்டாடுவது மூலம், 'தமிழ் நாட்டில் இடதுசாரிகளுடனான தனது தேர்தல் உறவு முறிந்து விட்டது' என்பதை, தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதற்காகவே, தொலைபேசி அழைப்பு குறித்து, ஜெயலலிதா, உடனடியாக செய்தி வெளியிட்டார். அதாவது, தேர்தலுக்கு பின், மாநில கட்சிகளின் ஆதரவோடு, பா.ஜ., அல்லது காங்., ஆதரவை பெற ஜெயலலிதா தயாராகத்தான் உள்ளார்.

* மம்தா ஏன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை?
மம்தா பானர்ஜியை பொறுத்தவரையில், ஜெயலலிதா உட்பட்ட அனைத்து மாநில கட்சி தலைவர்களில் யாரை வேண்டுமானாலும், பிரதமர் பதவிக்கு தான் ஆதரிக்க தயார் என்று, அவர் கூறியுள்ளது, தேர்தல் முடிந்து தனது பிரதமர் பதவி ஆசைக்கு அச்சாரம் போடுவதற்கான ஒரு முஸ்தீபே! 'உங்களில் யாருக்கு மற்ற மாநில கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,-வின் ஆதரவை பெறுவதற்கு திறமை இருக்கிறதோ அவர்களை நான் ஆதரிப்பதில் ஆட்சேபம் இல்லை' என்பதே அவர் அளித்த பேட்டியின் உள்பொருள். அதே சமயம், ஜெயலலிதா உட்பட்ட அவர்களில் யாருக்கும் அவ்வாறு ஆதரவு திரட்டும் திறமை இல்லை என்றால், அவர்களில் ஒவ்வொருவரும் அவர்களது கட்சிகளின் ஆதரவை தனக்கு அளித்து தன்னை பிரதமராக ஆக்குவதற்கு அச்சாரம் போடும் விதமாகவே மம்தா, தற்போது, செயல்பட்டு உள்ளார். இது போன்ற சூழலில் தான், 1996-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு மூப்பனார் பெயர் முதல் சுற்றிலேயே முன் வைக்கப்பட்டு, பின்னர் முலாயம் யாதவும் போட்டியிட்ட போது, இருவர் பெயரும் 'கேன்சல்' ஆகி, தேவ கவுடா, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் ஆனார். அந்த விதத்தில் மம்தா பானர்ஜி மிகவும் உஷாராக, தற்போதைய, முதல் சுற்றுகளில் தனது பெயரை முன்னிலைப் படுத்தவில்லை என்றே கருத வேண்டும். அது மட்டும் இல்லாமல், தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்குவதற்கு முன்னர் வரை, இவர்கள் இருவரது ஆதரவும் நரேந்திர மோடிக்கு தான், என்ற, பத்திரிகை செய்திகளையும் தங்களது செயல்பாடு மூலம் மறுத்திருக்கின்றனர். மாறாக, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்குமே 'சொந்த காரியம் ஜிந்தாபாத்' தான்!
- என். சத்திய மூர்த்தி, இயக்குனர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (சென்னை கிளை)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X