Jayalalithaa slams Karunanidhi for fielding Raja | ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்': ஜெயலலிதா கடும் தாக்கு| Dinamalar

ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்': ஜெயலலிதா கடும் தாக்கு

Updated : மார் 15, 2014 | Added : மார் 14, 2014 | கருத்துகள் (36)
Advertisement
Jayalalithaa, slam,Karunanidhi, field,Raja, ஊழல், வழக்கு,  தி.மு.க., 'சீட்', ஜெயலலிதா, தாக்கு

ஈரோடு: தமிழகத்தில், பல முனை போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசார உரையில், மாற்றம் செய்துள்ளார். நேற்று, பேசும் போது, தி.மு.க.,வில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசா, தயாநிதி, ஆகியோர் மீண்டும் போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதை, கடுமையாக சாடினார்.



ஈரோடு தொகுதியில், ஜெயலலிதா பேசியதாவது:

மத்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களில், மிகப் பெரியது, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல். இது தொடர்பாக, ராசா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; நீதிமன்ற விசாரணை, நடந்து வருகிறது. 'குற்றம் சாட்டப்பட்டவர்களை, தேர்தலில் போட்டியிட, அனுமதிக்கக் கூடாது' என்பது, பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. அதற்கு முரணான வகையில், ஊழல் வழக்கில் சிக்கிய ராசாவை, நீலகிரி வேட்பாளராக, கருணாநிதி அறிவித்துள்ளார். அதேபோல், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, தயாநிதி, மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, பத்திரிகையாளர்கள் கருணாநிதியை கேட்டபோது, 'அவர்கள் ஊழல் செய்யவில்லை' என, கருணாநிதி கூறவில்லை. 'சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது' எனக் கூறியுள்ளார். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட, அனுமதி கொடுத்ததை, நியாயப்படுத்தி பேசி, மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, வரும் தேர்தலில், பாடம் கற்பியுங்கள். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.




திருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. 'கெய்ல்' நிறுவனம் மூலம் விவசாய நிலங்களில், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியது. ஆனால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல உத்தரவிட்டோம். அவர்கள் நீதிமன்றம் சென்றனர். தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதேபோன்று, மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதியளித்து, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, மத்திய அரசை அகற்றவும், விவசாயத்தை பாதுகாக்கவும், அ.தி.மு.க., பங்கேற்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-மார்-201422:29:45 IST Report Abuse
g.s,rajan முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சொத்தை கருணாவைப் போல் குவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ,,தேவையும் இல்லை. ஆமாம் கருணா என்ன சொத்தே இல்லாத பஞ்சப்பராரியா இல்லை ஆண்டியா ???உலகப்பணக்காரர் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கும் போது சொத்தை மானாவாரியாக குவித்தது யார் ???சொல்லுங்கள் மக்களே
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
14-மார்-201407:17:54 IST Report Abuse
Aboobacker Siddeeq நீலகிரிக்கு தி.மு.க.சார்பாக ராஜா நிறுத்தப்பட்டுள்ளார் என்கிற மைனஸ் பாய்ண்டே போதும்..அ. தி.மு.க. எளிதாக வென்று விடும்...இனி பா.ஜ.க. - தே.மு.தி.க கூட்டணி வேட்பாளரை பொறுத்திருந்து பார்ப்போம்... நான்கு அல்லது ஐந்து முனை போட்டியில் அ.தி.மு.க வேட்பாளர் மயிரிழையில் வெற்றி பெறுவார்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மார்-201407:04:13 IST Report Abuse
g.s,rajan பாம்பின் கால் பாம்பறியும் ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X