'திட்டங்களை முடக்குவதில் ஜெயலலிதா கெட்டிக்காரர்': வார்த்தை ஜாலத்தில் வசை பாடும் 'வாகை' - Jayalalitha | Dinamalar

'திட்டங்களை முடக்குவதில் ஜெ., கெட்டிக்காரர்': வார்த்தை ஜாலத்தில் வசை பாடும் 'வாகை'

Added : மார் 15, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'திட்டங்களை முடக்குவதில் ஜெ., கெட்டிக்காரர்': வார்த்தை ஜாலத்தில் வசை பாடும் 'வாகை'

தேர்தல் பிரசாரத்திற்கு அ.தி.மு.க.,வின் சார்பில், நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுப்பி வைக்கும் வேலை, துரித கதியில் நடந்து வருகிறது. அதேநேரத்தில், தி.மு.க.,வில் நட்சத்திர பேச்சாளர்களை தேர்தல் பிரசாரத்திற்கு அனுப்புவதற்கான பயணத் திட்டம், தற்போது தான், தயாராகி வருகிறது. நடிகர், நடிகையர் சிலரை தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து, நடிகரும், தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளருமான வாகை சந்திரசேகர் அளித்த பேட்டி: வசதி படைத்தவர்களே, நிறைய பணம் செலவழிக்க தகுதியானவர்களே, தி.மு.க., சார்பில் வேட் பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என, ஊடகங்கள் எழுதியது தவறானது. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற, நோக்கத்தில், ஊடகங்கள் இஷ்டத்திற்கு கற்பனையாக வெளியிட்ட செய்திகளை பார்த்து, வருத்தப்பட்டேன். தி.மு.க., வேட்பாளர்களில் பலர், வசதி இல்லாதவர்கள்; இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வை பற்றி பேசுபவர்கள், குடும்ப அரசியல் பற்றித்தான் பேசுவர். தனி ஆளாக இருப்பவர்கள் தான், மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நல்லது செய்யக்கூடாதா, செய்தால் தவறா. அரசியலுக்காக யார் வேண்டுமானலும், எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். நல்லவர்களின் பக்கம் மக்கள் இருப்பார்கள் என்பது, வரும் தேர்தல் முடிவில் தெரியும்.

நல்ல திட்டங்களை முடக்குவதில், ஜெ., கெட்டிக்காரர் என்பது குறித்து, பக்கம் பக்கமாக பட்டியலிடலாம். கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட, புதிய தலைமை செயலகத்தை மூடியது, மதுரவாயல் எக்ஸ்பிரஸ் சாலை கட்டுமான பணியை தடுத்தது, அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை பராமரிக்காமல் போட்டது உட்பட, தி.மு.க.,வின் நல்ல திட்டங்களை எல்லாம் முடக்க, ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருவது மக்களுக்கு தெரியாமல் இல்லை. அயோத்திக்கு கரசேவைக்கு ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு எப்படி நல்லது செய்வார். நல்லது செய்வது போல நடிக்கலாம். அவ்வளவு தான் அவரால் முடியும். தி.மு.க., கட்டுக்கோப்பான கட்சி. எத்தனை பேர் கல் எறிந்தாலும் தி.மு.க., என்ற, தேன்கூட்டை கலைத்துவிட முடியாது. தி.மு.க., குடும்பத்தை பிரிக்க, சூழ்ச்சியாளர்கள் நினைத்தால், அது நடக்காது. அழகிரி விவகாரத்தில் நான் ஏதும் பதில் சொல்வதற்கில்லை. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காததால், தி.மு.க.,விற்கு எந்த நஷ்டமும் இல்லை. நடிகர், நடிகையர் பிரசாரத்திற்கு சென்றால் கூட்டம் வரும், ஓட்டு விழுமா என, கேட்பவர்களுக்கு நான் சொல்வது, நான், நேற்று தி.மு.க.,விற்கு வரவில்லை. 35 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டேன். மக்களுக்கு என் மீது மரியாதை இருக்கிறது. இவ்வாறு, வாகை சந்திரசேகர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nijanthan - Sydney  ( Posted via: Dinamalar Android App )
16-மார்-201401:25:29 IST Report Abuse
Nijanthan போடா டேய் சொட்டை தலையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X