வாசகர் கடிதம்| Dinamalar

வாசகர் கடிதம்

Added : மார் 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'சிரிப்பு வருது சிரிப்பு வருது' என்ற தலைப்பில், கட்சிகளை, திரைப்படப் பாடலோடு ஒப்பிட்டு, அந்தந்த 'தலை'களை பார்த்ததும், படித்ததும், ஆஹா... ஹா... ஒரே சிரிப்புத் தான் போங்கள்!
தி.பொ.சண்முகசுந்தரம், கடலூர்

தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், மகளிருக்காக 33 சதவீத இடஒதுக்கீடு; தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் உள்ள, பெண்களோ இரண்டு பேர். ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வேண்டும்; மதவாத கட்சிகளுடன் கூட்டு கிடையாது. மக்கள் எல்லாம் பூம் பூம் மாடுகளா?

கே.என்.சுப்பிரமணியன், சென்னை

பா.ஜ., கூட்டணியின் பிரசார துவக்கம் என்பது, சுமுகமான தொகுதி பங்கீட்டிற்கு பிறகு, அக்கூட்டணியின் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பதுதான் தற்போதுள்ள சூழலில் சில முரண்பாடுகளை சரிசெய்ய உதவும்.

என். பரமகுரு, சிதம்பரம், கடலூர்

தமிழகத்தில், ஐந்து முனை போட்டி என்றானது, மிக மகிழ்ச்சி. தேர்தலில், பெரிய கட்சிகள், அங்கீகாரமே இல்லாத கட்சிகளுக்கு, சீட்டுகளையும் அள்ளிக் கொடுத்து, செலவையும் ஏற்று, வளர்த்து விடுவதை விட, தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்வதே மேல். தவிரவும், கூட்டணியாக சந்திப்பதை விட, தன்னந்தனியாக மக்களை சந்திக்கையில் அனைத்து கட்சிகளின், ஒரிஜினல் ஓட்டு வங்கி வெளிப்படும்.

பிரசன்னா, சென்னை

கருணாநிதி, அடிக்கடி கதவை மூடுவதும், திறப்பதும் என்ற வேலைக்கு, முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மனுத்தாக்கல் செய்யும் முதல் நாள் வரை, கூட்டணி கதவை திறந்து வைப்பது நல்லது.

- சுரேஷ், திருச்சிற்றம்பலம், கடலூர்

ஜெ.வைப் போல ஸ்டாலினும் கட்சியை, ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர எடுத்த முயற்சியில், முதல் கட்டமாக தி.மு.க., வேட்பாளர் தேர்வில் வெற்றி ?பற்றுள்ளார்.

ஏ.முருகதாஸ், சென்னை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X