'ஆன் டூட்டி'யில் மட்டும் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டாளிகள்| Dinamalar

'ஆன் டூட்டி'யில் மட்டும் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டாளிகள்

Added : மார் 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
'ஆன் டூட்டி'யில் மட்டும் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டாளிகள்

வாரம் ஒரு போராட்டம், மாதம் ஒரு உண்ணாவிரதம், மண்டல அலுவலகங்கள் முற்றுகை, ஓய்வு பெற்றோர் பேரணி என, போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முட்டி, மோதியும், கிடைக்க வேண்டிய எந்தவொரு சலுகையும், அவர்களுக்கு கிடைப்பதில்லை. நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்களோ, பேருந்து, பணிமனை, மோட்டல் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து, கடன் பெற்று நிலைமையை சமாளித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் லோக்சபா தேர்தலுக்கு ஊழியர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொது செயலர், ஆறுமுக நயினார் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களை மிகவும் பாதித்துள்ள பிரச்னை?


தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட, 10 சதவீத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. கோவை, சேலம், அரசு விரைவு, மதுரை ஆகிய நான்கு கழகங்களின் ஊழியர்களுக்கு, எட்டு மாதத்திற்கான பாக்கியும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றோரை பொறுத்தவரை, 45 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி நிறுத்தப்பட்டு உள்ளது.

* ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்குவதில் என்ன தான் சிக்கல்?


போக்குவரத்து கழகங்களில், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடத்தவேண்டிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கடந்த ஆறு மாதங்களாக மாநில அரசு துவக்காமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், 'அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச விரும்புகிறோம் அல்லது 10 சதவீதம் ஓட்டுகளை பெற்ற தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்' என, கோர்ட்டில், மாநில அரசு, தன் தரப்பு விளக்கத்தை கூறி, பிரச்னைக்கு தீர்வு காணலாம். ஆனால், அப்படி செய்யாமல் அலட்சியம் காட்டுகிறது. தாங்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என, தொ.மு.ச.,வும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

* 20 ஆயிரத்து 500 பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது ஏன்?


பேருந்தை இயக்குவதற்கான எரிபொருள் செலவு மற்றும் நிர்வாக செலவிற்கே 80 சதவீதம் ஆகி விடுகிறது. இவை தவிர்த்து, பேருந்துகளின் பராமரிப்பு, தேய்மானம், விஸ்தரிப்பு என, செலவுகள் உள்ளன. எட்டு கழகங்களும் வாங்கிய கடனுக்கு மட்டுமே, மாதந்தோறும், வட்டியாக, 30 கோடி வரை செலுத்துகின்றன.


* நஷ்டத்தில் இயங்கும் கழகங்கள் நிலைமையை எப்படி சமாளிக்கின்றன?


ஊழியர்களின் பணத்தில் தான் போக்குவரத்து கழகங்களே இயங்குகின்றன. வருங்கால வைப்பு நிதி, 2,000 கோடி ரூபாயை அறக்கட்டளைக்கு செலுத்தாமல், கழகங்கள் பாக்கி வைத்துள்ளன. மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பென்ஷன் அறக்கட்டளைக்கு, கழகங்கள் வழங்க வேண்டிய தொகையிலும், 1,000 கோடி ரூபாய் செலுத்தவில்லை. கடந்த, 2003க்கு பின், பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிபாசிட் செய்யப்பட வேண்டிய, 300 கோடி ரூபாய் செலுத்தப்படவில்லை. ஓய்வு பெற்றோருக்கும் பணிக்கொடை தொகை பாக்கி உள்ளது. இப்படி, ஊழியர்களுக்கு சேர வேண்டிய, 4,000 கோடி ரூபாயை வைத்து, நிர்வாகங்கள் நஷ்டத்தை சமாளித்து வருகின்றன.

* போக்குவரத்து கழக வளர்ச்சிக்கு, அரசு தரப்பில், புதிய பேருந்துகள் வழங்கப்படுகிறதே?


புதிய பேருந்துகளை, அரசு, இலவசமாக வழங்கவில்லை. மாறாக, போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன உதவியுடன் வங்கி கடனை பெற்றே வாங்கித் தருகின்றனர். இந்த கடனை, கழகங்களே திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பக்கம் புதிய பேருந்துகள் வந்தால், மறுபக்கம் பல பேருந்துகள் கோர்ட் மூலம் சிறைபிடிக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கு காப்பீடு செய்யாமல், குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, அதிலிருந்து இழப்பீடு தரும் முயற்சி எடுபடவில்லை. நஷ்டத்தில் இயங்கும் பல கழகங்கள், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாததால், இன்று, 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோர்ட்டில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன.

* இத்தனை நஷ்டத்திற்கு இடையேயும், பலர் 'ஆன் டூட்டி' என்ற பெயரில் அமர்க்களமாக சுற்றி வருகின்றனரே?


'ஆன் டூட்டி', 'அதர் டூட்டி' என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வும் கூட்டாளிகள்தான். எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அந்த கட்சியின் தொழிற்சங்கத்தை சேர்ந்த 5,000 ஊழியர்கள் வரை, 'ஆன் டூட்டி' என்கிற, பெயரில் வேலை செய்யாமலும், 'அதர் டூட்டி' என்கிற, எளிமையான வேலையிலும் பொழுதை கழிக்கின்றனர். இது, கழகங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது.

ஆறுமுக நயினார், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொது செயலர்,

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X