வ.உ.சி., முன்னேற்ற கழகம் 10 தொகுதி வேட்பாளர்கள்| Dinamalar

வ.உ.சி., முன்னேற்ற கழகம் 10 தொகுதி வேட்பாளர்கள்

Added : மார் 15, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி: அய்யா வ.உ.சி., முன்னேற்ற கழகம் சார்பில், 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல், காரைக்குடியில் வெளியிடப்பட்டது.
காரைக்குடியில், அய்யா வ.உ.சி., முன்னேற்ற கழக, வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் மாநில பொது செயலாளர் ராஜகோபால் (ராமநாதபுரம்), சரவணன் (சிவகங்கை), வி.எம்.சுப்பிரமணியன் (திண்டுக்கல்), மாநில மகளிரணி தலைவி ராஜேஸ்வரி ராமசாமி (மதுரை), திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, பெரம்பலூர் உட்பட 10 தொகுதிக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். மாநில தலைவர் நீலகண்ட பிள்ளை கூறியதாவது: 2013-ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 110 அமைப்புகளில், 2 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 20.5 சதவீத ஓட்டு வங்கி உள்ளது. தற்போது 19 மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 10 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதி ஒன்பது தொகுதிக்கு வேட்பாளர்கள், ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவர். தமிழ்நாடு வ.உ.சி., முன்னேற்ற பேரவை, முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது, என்றார். தேர்தல் அறிக்கை: வெள்ளாளர் இன மக்களை மிகவும் பிற்பட்டோர் இனத்தில் சேர்க்க பாடுபடுதல், வ.உ.சி., சிலையை மாவட்டம் தோறும் நிறுவுதல், கச்சத்தீவை மீட்பதற்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம். இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த, கழகம் முழு மூச்சுடன் அரசை வலியுறுத்தும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X